நெல்லை கோதையாறு வனப்பகுதிக்குள் வழுக்கி விழுந்து உயிரிழந்த யானை!
நெல்லை, 19 நவம்பர் (ஹி.ச.) நீலகிரி மாவட்டம் கூடலூர் வனக்கோட்டத்திற்குட்பட்ட ஓவேலி பகுதியில் தொடர்ந்து மனிதர்களைத் தாக்கி வந்த ராதாகிருஷ்ணன் காட்டு யானையை கடந்த செப்டம்பர் மாதம் வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். இந்த யானை தாக்கியதில் க
Elephant


நெல்லை, 19 நவம்பர் (ஹி.ச.)

நீலகிரி மாவட்டம் கூடலூர் வனக்கோட்டத்திற்குட்பட்ட ஓவேலி பகுதியில் தொடர்ந்து மனிதர்களைத் தாக்கி வந்த ராதாகிருஷ்ணன் காட்டு யானையை கடந்த செப்டம்பர் மாதம் வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.

இந்த யானை தாக்கியதில் கடந்த 10 ஆண்டுகளில் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

எனவே, பிடிபட்ட யானையை முதுகலை புலிகள் காப்பகத்தில் பிரத்தியேக மரக்கூண்டில் வைத்து வனத்துறையினர் சாந்தப்படுத்தினர்.

பின்னர், கடந்த அக்டோபர் 25ஆம் தேதி திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள அப்பர் கோதையார் வனப்பகுதியில் ராதாகிருஷ்ணன் யானையை கொண்டு வந்து விட்டனர்.

ஏற்கனவே, தேனி மாவட்டத்தில் மக்களை அச்சுறுத்தி வந்த அரிக்கொம்பன் மற்றும் புல்லட் ஆகிய காட்டு யானைகளும் இதே பகுதியில் விடப்பட்டது குறிப்பிடதக்கது.

கோதையார் வனப்பகுதியில் விடப்பட்ட ராதாகிருஷ்ணன் யானையை வனத்துறையினர் ரேடியோ காலர் மற்றும் ட்ரோன் உதவியுடன் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். இந்த கண்காணிப்பு பணியில் 50க்கும் வனப்பணியாளர்கள் ஈடுபட்டனர்.

யானை இயல்பாக இருப்பதாக வனத்துறை செயலாளர் சுப்ரியா சாஹூவும், சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டு இருந்தார்.

இந்நிலையில், கோதையாறு மாஞ்சோலை பகுதியில் கனமழை பெய்து வருகிறது.

இதனால் ராதாகிருஷ்ணன் யானை 20 அடி பள்ளத்தில் வழுக்கி விழுந்ததில் முகம், கழுத்து பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு உயிரிழந்து விட்டதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

Hindusthan Samachar / ANANDHAN