முன்னாள் இந்திய பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்ததினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி அஞ்சலி
புதுடெல்லி, 19 நவம்பர் (ஹி.ச.) முன்னாள் இந்திய பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்த தினத்தை முன்னிட்டு இன்று(நவ.19) காங்கிரஸ் கட்சியினர் அவரை நினைவு கூர்ந்து அவரது உருவப்படங்கள் மற்றும் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். இ
முன்னாள் இந்திய பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்ததினத்தை முன்னிட்டு  பிரதமர் மோடி அஞ்சலி


புதுடெல்லி, 19 நவம்பர் (ஹி.ச.)

முன்னாள் இந்திய பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்த தினத்தை முன்னிட்டு இன்று(நவ.19) காங்கிரஸ் கட்சியினர் அவரை நினைவு கூர்ந்து அவரது உருவப்படங்கள் மற்றும் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

இந்திரா காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி சோனியா காந்தி உள்ளிட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் இன்று மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இந்நிலையில் இந்திய பிரதமர் மோடி இந்திரா காந்தியின் பிறந்ததினத்தை முன்னிட்டு அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.

இன்று (நவ 19) எக்ஸ் தளத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது,

முன்னாள் பிரதமர் திருமதி இந்திரா காந்தி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு அஞ்சலி என்று தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / vidya.b