Enter your Email Address to subscribe to our newsletters

புட்டபர்த்தி, 19 நவம்பர் (ஹி.ச.)
புட்டபர்த்தி சத்ய சாய்பாபா நூற்றாண்டு விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று (நவ.,19) காலை புட்டபர்த்தி வந்தடைந்தார்.
பின்னர், காலை 10:30 மணியளவில் சாய்பாபாவின் மகா சமாதியில் அஞ்சலி செலுத்தினார்.
அங்கு வேத பண்டிதர்கள் மந்திரங்களை முழங்க பிரதமர் வழிபட்டு, தியானத்தில் ஈடுபட்டார்.
ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் நூற்றாண்டு விழாவில், பிரதமர் மோடி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, கிரிக்கெட் முன்னாள் வீரர் சச்சின் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நூற்றாண்டு விழாவில்,கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
பிரபல பாடகி சுதா ரகுநாதன் குழுவினரின் இசை நிகழ்ச்சி, நாட்டியக்கலைஞர்களின் நடனங்களை பிரதமர் மோடி மற்றும் சிறப்பு விருந்தினர்கள் கண்டு களித்தனர்.
மேலும் இவ்விழாவில், டிரம்ஸ் சிவமணியின் இசை அதிர வைத்தது. இதனை பிரதமர் மோடி கைதட்டி பாராட்டினார்.
இந் நிகழ்ச்சியில், பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் வாழ்க்கை, போதனைகள் மற்றும் பாரம்பரியத்தை கவுரவிக்கும் விதமாக நினைவு நாணயம் மற்றும் ஒரு தபால் தலையை பிரதமர் மோடி வெளியிட்டார்.
Hindusthan Samachar / vidya.b