Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 19 நவம்பர் (ஹி.ச.)
சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் இன்று (நவ 19) காலை சந்தித்து பேசினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய திருமாவளவன் கூறியதாவது,
தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழகம் தொடங்குவதற்கு தமிழக அரசு சார்பில் கேளம்பாக்கம் அருகில் 36 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது, கோரிக்கை ஏற்று தமிழக முதலமைச்சர் விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு இன்று நிலத்தை ஒதுக்கியதற்காக தமிழக முதல்வரை சந்தித்து நன்றி தெரிவித்தோம்.
ஈழத் தமிழர்களுக்கு அரசியல் அதிகாரம் வழங்க புதிய இலங்கை அரசமைப்பு சட்டத்தில் இடம்பெற இலங்கை அரசுக்கு இந்திய அரசு அழுத்தம் தர தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கையை தமிழக முதலமைச்சரிடம் முன்வைத்தோம்.
கடந்த வாரம் இலங்கை யாழ்பாணத்தில் பார்வையிட்ட போது போர் முடிந்தும் போர் பதற்ற நிலையிலேயே அந்த இடம் உள்ளது, ஈழத்தமிழர்கள் அச்சத்திலேயே வாழ்கின்றனர்.
கடந்த 20 ஆண்டுகளாக சிறை கைதிகளாக, ஆயுள் கைதிகளாக உள்ள இஸ்லாமிய கைதிகள் விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைத்தோம்.
எஸ். ஐ. ஆர் வேண்டாம் என 24ஆம் தேதி விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம். எஸ் ஐ ஆர் என்பது பாஜகவும், தேர்தல் ஆணையமும் நடத்துகிற கூட்டு சதி அவர்கள் குடியுரிமையை பறிப்பதற்கான செயல் திட்டமாகவும் எதிர்ப்பு வாக்குகளை பட்டியலில் இருந்து நீக்குவதற்காகவும் செயல் திட்டமாகவு இதை வடிவமைத்துள்ளார்கள்.
இந்த நடவடிக்கையை உடனடியாக நிறுத்த வேண்டும் பழைய முறைப்படி SIR முறையை கொண்டு வரவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Hindusthan Samachar / vidya.b