முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் ராகுல், கார்கே, சோனியா காந்தி மரியாதை !!
புதுடெல்லி, 19 நவம்பர் (ஹி.ச.) முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி உள்ளிட்டோர் அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்தநாள் இன்று(ந
இந்திரா காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய ராகுல், கார்கே, சோனியா காந்தி


புதுடெல்லி, 19 நவம்பர் (ஹி.ச.)

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி உள்ளிட்டோர் அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்தநாள் இன்று(நவ.19) கொண்டாடப்படுகிறது.

இந்தியா முழுவதும் உள்ள காங்கிரஸ் தொண்டர்கள் அவரது பிறந்த நாளையொட்டி, இந்தியா முழுவதும் உள்ள காங்கிரஸ் கட்சியினர் அவரது உருவப்படங்கள் மற்றும் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு தில்லியில் உள்ள சக்தி ஸ்தலத்தில் அவரது நினைவிடத்தில் அவரின் பேரனும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் எம்பியுமான ராகுல் காந்தி அஞ்சலி செலுத்தினர்.

முன்னதாக, காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் நாடாளுமன்ற தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

அதனைத்தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களும் இந்திரா காந்தியின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தி வருகின்றனர்.

Hindusthan Samachar / JANAKI RAM