Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 19 நவம்பர் (ஹி.ச.)
பிரதமரின் பொருளாதார மேம்பாட்டு நடவடிக்கைகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக விவசாயிகள் மாநாட்டில் பள்ளி மாணவர்கள் இருவர் பதாகைகள் ஏந்தி நின்றிருந்தனர்.
இதனை தனது சிறப்புரையின்போது கவனித்த பிரதமர் மோடி மாணவர்களின் கையில் இருந்த பதாகைகளை பெற்று வழங்குமாறு தெரிவித்தார்.
பள்ளி மாணவர்கள் வைத்திருந்த பதாகையில் ('we promise, I will graduate in a rank 2 economy, I will retire in the rank 1 economy, thanks to your vision) நான் பொருளாதாரத்தில் இரண்டாவது இடத்தில் இருக்கும் போது பட்டதாரி ஆவேன், பொருளாதாரத்தில் முதலிடத்தில் இருக்கும்போது ஓய்வு பெறுவேன், இதற்காக நன்றி' என எழுதப்பட்டிருந்தது.
Hindusthan Samachar / V.srini Vasan