மீண்டும் திமுக ஆட்சிக்கு வருவது சமுதாயத்திற்கு நல்லதல்ல - தமிழிசை சௌந்தரராஜன்
வேலூர், 19 நவம்பர் (ஹி.ச.) வேலூர் மாவட்டம், சத்துவாச்சாரியில் பாரதிய ஜனதா கட்சியின் வாக்குசாவடி பொறுப்பாளர்கள் மற்றும் மண்டல பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக தமிழக பாஜக முன்னாள் தலைவரும், முன்னாள் ஆளுநருமான த
Tamilisai Soundararajan


வேலூர், 19 நவம்பர் (ஹி.ச.)

வேலூர் மாவட்டம், சத்துவாச்சாரியில் பாரதிய ஜனதா கட்சியின் வாக்குசாவடி பொறுப்பாளர்கள் மற்றும் மண்டல பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக தமிழக பாஜக முன்னாள் தலைவரும், முன்னாள் ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் கலந்துகொண்டு பேசினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

பிரதமர் மோடி அவர்கள் தமிழகம் வருகிறார்.

முதல்வர் ஸ்டாலின் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

விவசாயிகளுக்காக பிரதமர் தமிழக வருகிறார்.

ஆனால் தமிழக முதலமைச்சர் ஈகோவாக எடுத்துகொண்டு கடிதம் எழுதி வரவேற்பது சரி கிடையாது.

நமக்கு எவ்வளவு மாற்றுகொள்கை இருந்தாலும் வரவேற்க வேண்டும்.

தமிழகத்திற்கு தேவையான நிதியை தாராளமாக மத்திய அரசு வழங்கியுள்ளது.

கொடுக்கவில்லை என்பது தவறான பிரச்சாரம்.

நிதி ஆயோக் கூட்டத்திற்கே தமிழக முதல்வர் செல்லவில்லை.

நம் ஊருக்கு வரும் போது பிரதமரை வரவேற்காமல் இருப்பது தமிழ் கலாச்சாராமா? நீங்கள் வேற்றுமையை காண்பிக்க வேண்டாம்.

பீஹாரில் மத்திய மாநில அரசுகள் சேர்ந்து பணியாற்றினால் மக்களுக்கு நல்லது நடக்கும்.

மோதல் போக்கை காண்பிக்காமல் வரவேற்பது தமிழ் பண்பு.

எது உங்களை தடுக்கிறது. ஏன் நீங்கள் ஒரு மாவட்டம் சென்றால் கலெக்டர் எஸ்பி அமைச்சர் எல்லாம் வரவேற்கிறார்கள்.

உங்களை உதாசீனப்படுத்தினால் உங்களுக்கு எப்படி இருக்கும்? 2002 பட்டியலில் பெயர் இருந்தால் பட்டியலை பார்த்து நான் பூர்த்தி செய்தேன்.

பி.எல்.ஓ அதிகாரிகளுக்கு பயிற்சி கொடுக்காதது என்பது தமிழக அரசின் தவறு.

தேர்தல் ஆணையம் அதிகாரிகள் ஒத்துழைககாதவர்களை ஏன் கொடுத்தார்கள்.

திமுக வெற்றி பெற்றது போலி வாக்காளர்களை நம்பிதான்.

வரைவு வாக்காளர் பட்டியல் வெளிடவுள்ளனர். இறந்தவர்களை எல்லாம் இழுத்து வந்து ஓட்டு போட வைத்தனர் திமுககாரர்கள். வைகோ போதையை தடுக்க அறிவாலயத்தை நோக்கி செல்ல வேண்டும்.

மேகதாது அனைவிவகாரம் அதனை கட்டவும் முயற்சி செய்கின்றனர். அதனை ராகுல் கண்டுகொள்ளவில். விஸ்வகர்மா உதவி கொடுக்க முதல்வர் மறுக்கிறார்.

முத்ரா செல்வமகள் போன்ற திட்டங்களும் 11 மருத்துவக்கல்லூரிகள் வழங்கியது மத்திய அரசு தான்.

சென்னை தூத்துக்குடி போன்ற விமானங்கள்நிலையங்கள் தயாராகி வருகிறது. வேலூர் விமான நிலையமும் நிச்சயம் திறக்கபடும். பாஜக கூட்டணி பலமில்லை என சொல்லும் சீமானே பலமில்லாது தான் இருக்கிறார்.

பீஹாரில் பாஜக கூட்டணி தான் வெற்றி பெற்றது. தேசிய ஜனநாயக கூட்டணி வென்றது. ஆனால் சீமான் கருணாநிதியை தாண்டி கரிகாலனிடம் சென்றுவிட்டார்.

சீமான் எஸ்.ஐ.ஆர் எதிர்க்கிறார். திமுகவையும் எதிர்க்கிறார். அவர் தாக்குதல் எந்த தாக்குதலையும் ஏற்படுத்தாது.

தவெகவுக்கும் திமுகவுக்கும் தான் போட்டி என டிடிவி தினகரன் சொல்வது, ஸ்டாலினை எதிர்த்த அம்மாவை என்ன மன நிலையில் வைத்துள்ளீர்கள்.

எல்லோரும் உதிரியாக இல்லாமல் உறுதியாக இருப்போம். திமுகவை தோற்கடிப்போம். பிரேமலதா பீஹார் தேர்தலை பாராட்டியுள்ளார்.

அவர் நல்ல முடிவை எடுப்பார். பாமக தேமுதிக, அமமுக, விஜய், சீமான் எல்லோருடைய கருத்து திமுகவை தோற்கடிப்பது தான்.

அந்த வியூகத்திற்குள் எல்லோரும் இணைந்து திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்றார்.

Hindusthan Samachar / ANANDHAN