Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 19 நவம்பர் (ஹி.ச)
சென்னையில் இருந்து கோயம்புத்தூர் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வருகை தந்த பாஜக மூத்த நிர்வாகி தமிழிசை சௌந்தர்ராஜன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர்,
பாரத பிரதமர் தமிழ்நாட்டிற்கு வருவதை மகிழ்ச்சியோடு வரவேற்கின்றோம்.
பீகாரில் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு முதலமைச்சர் பதவி ஏற்பதற்கு முன்னதாக தமிழகம் வர வேண்டும் எனவும் தமிழக விவசாயிகளின் மீது அக்கறை கொண்டு நிகழ்ச்சியில் பங்கேற்று நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு ஊக்க தொகையை அறிவிக்கின்றார்.
இதில் மிக மிக கண்டிக்கத்தக்கது என்னவென்றால் வந்தவரை வரவேற்பது தான் தமிழகம் கலாச்சாரம்.
பிரதமர் நம் தமிழகத்திற்கு வருகிறார் நமது கோவைக்கு வருகிறார். ஆனால் முதலமைச்சர் கடிதம் எழுதிக் கொண்டே இருக்கின்றார்.
நமது ஊருக்கு பிரதமர் வரும்போது கடிதம் எழுதுவது சரியா என நமது மக்களிடம் நான் கேட்கின்றேன்.
பிரதமர் தமிழகத்திற்கு வருகின்றார் என்னென்ன கோரிக்கை இருக்கின்றதோ அதை பிரதமரிடம் சொல்ல வேண்டியது தானே, அப்போது வரை இருப்பது உங்களது ஈகோ பிரச்சனை இல்லை.
ஈகோ பிரச்சனையை தமிழக மக்களின் மீது திணிக்கின்றீர்கள், தமிழக மக்களின் கோரிக்கையை நிறைவேற்ற வதற்கு வரவேற்பு அளித்து பேசுவதற்கு வாய்ப்பு கிடைக்கின்றது. அதை தமிழக முதலமைச்சர் நிராகரிக்கின்றார்.
முதலமைச்சர் தமிழக மக்களின் நலனை நிராகரிக்கின்றார் நேரடியாக நான் குற்றம் சாட்டுகின்றேன்.
முதலமைச்சரை சந்திப்பதை ஏன் மறுக்கின்றீர்கள் நீங்கள் தமிழகத்தின் முதலமைச்சர் என்பது போல் அவர் நாட்டின் பிரதமராக இருக்கின்றார் அவர் பதவிக்கு மரியாதை செலுத்த விருப்பம் இல்லையா. மக்களின் பிரச்சினையை திமுகவின் பிரச்சினையாக பார்க்கப்படுகிறதா, ஆட்சியில் உள்ள பிரச்சினையை கட்சி பிரச்சினையாக பார்க்கின்றீர்களா? இது மிகவும் வேதனை அளிக்க கூடியது இது தமிழ் மக்களுக்கு.
இதை ஒருபோதும் ஒப்புக் கொள்ள முடியாது முதலில் முதலமைச்சர் தமிழக கலாச்சாரத்தை கற்றுக் கொள்ள வேண்டும்.
பிரதமர் கோவை வருவதற்கு முன்னதாகவே கோவையில் மெட்ரோ வராது என பொய் பிரச்சாரத்தை வீசி தவறான அரசியலை இந்தியா கூட்டணி செய்து வருகிறது அது கண்டிக்கத்தக்கது.
சென்னையில் 87 கோடி ரூபாய்க்கு திட்டமிட்ட மழைநீர் வடிகால்வாய் எதுமே செய்யப்படவில்லை. இன்று படம் ஒன்று பார்த்திருப்பீர்கள் படகுகளை லாரியில் கட்டி வைத்திருக்கின்றார்கள்.
மழைநீர் வடிகால்வாய் முறையாக செய்திருந்தால் படகு எதற்கு மாநகராட்சி தரப்பில் படகுகள் வாங்கி வைக்கப்பட்டிருக்கிறது.
மாநிலத்தில் இருக்கக்கூடிய பக்கத்து தெருவில் இருக்கக்கூடிய பிரச்சனைகளை சரி செய்யாமல், மெட்ரோ நிறுவனம் இன்று மிக தெளிவாக சொல்லி இருக்கிறார்கள், திட்ட அறிக்கையில் சில சந்தேகங்கள் இருக்கிறது என மெட்ரோ நிறுவனம் சொல்லியிருக்கிறது.
யு பி ஏ அரசாங்கத்தில் இருந்தபோது எவ்வளவு மெட்ரோ கொண்டுவரப்பட்டது. எவ்வளவு விமான நிலையங்கள் விரிவுபடுத்தப்பட்டது. ஒன்றுமே செய்யவில்லை ஐந்து அமைச்சர்கள் இருந்தும் எதுவும் செய்யவில்லை.
ஆனால் 10 ஆண்டுகளில் பாரத பிரதமர் தமிழ்நாட்டிற்கு 11 லட்சம் கோடி ஒதுக்கி இருக்கிறார். மறுபடியும் மறுபடியும் பொய் பிரச்சாரத்தை செய்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.
அரசுக்கு எதிராக ஜாக்டோ ஜியோ போராடி வருகின்றனர் செவிலியர்கள் ஏற்கனவே போராடி வருகின்றனர் மருத்துவமனைகளில் அடிப்படை வசதிகள் இல்லை என பத்திரிக்கையில் செய்திகள் வருகிறது.
தமிழகத்தில் அவ்வளவு ஓட்டை வைத்துக் கொண்டு ஓட்டு வாங்கிக்கொண்டு எதற்கெடுத்தாலும் மத்திய அரசை குறை சொல்கின்றனர்.
இதில் எம்பி வெங்கடேஷன், எதையுமே படிப்பதை இல்லை ஏதாவது குறை சொல்லிக் கொண்டே இருப்பது அதை நிறுத்திக் கொள்ள வேண்டும். உங்களது பொய் பிரச்சாரம் முடிவுக்கு கொண்டு வரப்படும்.
இன்று இளைஞர்களும் பெண்களும் பாஜக கூட்டணி பக்கம் நிற்கின்றார்கள். அதுதான் பீகாரில் நிலைநிறுத்து பட்டிருக்கிறது நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
இன்று ஒரு அறிவிப்பு வந்திருக்கிறது ராமேஸ்வரத்தில் இருந்து வழியாக மெட்ரோ ரயில் வரும் என அறிவிப்பு வந்திருக்கிறது.
இந்தியாவிலே மெட்ரோ மற்றும் வந்தே பாரத் ரயில்கள் அதிகமாக இருப்பதாகவும் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் மெட்ரோ ரயில் பெட்டிகள் வெளிநாட்டில் இருந்து வாங்கப்பட்டதாகவும் தற்போது பெரம்பூரில் இருந்து மெட்ரோ ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டு வெளிநாட்டுகளுக்கு அனுப்புகிறது.
இந்தியாவிலேயே அதிகமாக தமிழ்நாட்டிற்கு தான் வந்தே பாரத் கொடுக்கப்பட்டிருக்கிறது. இவ்வளவு பார்த் ரயில் கொடுக்கப்பட்ட பாஜகவுக்கு மெட்ரோ ரயில் கொடுக்கப்படாதா ?
நீங்கள் அனுப்பக்கூடிய அனைத்து திட்டங்களும் தவறான திட்டங்களாக இருக்கின்றது. 100 நாள் வேலை திட்டத்தில் ஊழல் செய்த இரண்டாவது மாநிலமாக தமிழ்நாடு இருக்கின்றது. இப்படிப்பட்ட திட்டங்களை தடுத்தினால் கம்யூனிஸ்டுகள் வாய் வயிரில் அடிக்கிறார்கள் என தெரிவிக்கிறார்கள். பாஜக எப்போதும் அதை செய்யாது.
தமிழக மக்கள் பிரதமருக்கு வரவேற்பை தருகிறார்கள். பீகார் தேர்தலை போல தமிழக மக்களும் என் டி கூட்டணிக்கு வாக்களிப்பார்கள்.
எஸ் ஐ ஆர் பணிகள் 12 மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது அதில் 11 மாநிலங்களில் முடிவடைய நிலையில் இருக்கின்றது ஆனால் தமிழகத்தில் எஸ்ஐஆர் பணிகள் முடிவடை கூடாது என திமுக அரசு செயல் பட்டு வருகிறது.
திமுக போலிக்கான வாக்காளர்களை வைத்து வெற்றி பெற்றிருக்கிறார்கள் எஸ் ஐ ஆர் வைத்து போலி வாக்காளர்கள் நீக்கப்படுவார்கள்.
தமிழ்நாடு வருவாய்த் துறையினர் எஸ்ஐஆர் பணிகளை புறக்கணிக்கப்படுவதாக தெரிவித்திருந்த நிலையில் அதை யாரும் புறக்கணிக்க முடியாது தேர்தல் ஆணையத்தின் பணிகளை யாரும் புறக்கணிக்க முடியாது.
பீகாரில் பாஜக வெற்றி பெற்ற பிறகு எஸ்.ஐ யார் என்று குற்றம் சாட்டுகிறார்கள் அப்போது காங்கிரஸ் வெற்றி பெற்றால் எஸ் ஐ ஆர் பற்றி பேச மாட்டார்கள் என்று கூறினார்.
Hindusthan Samachar / P YUVARAJ