வ உ சி நினைவு தினத்தையொட்டி கோவை மத்திய சிறையில் உள்ள செக்கிற்கு அஞ்சலி செலுத்த அனுமதி மறுப்பு - கேட்டிற்கு மாலை அணிவித்து கண்டன கோஷங்கள் எழுப்பிய நாம் தமிழர் கட்சியினர்
கோவை, 19 நவம்பர் (ஹி.ச.) கோவை மத்திய சிறைச் சாலை வளாகத்தில் சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனார் இழத்த செக்கு வைக்கப்பட்டு உள்ளது. அவரின் பிறந்த நாள் மற்றும் நினைவு நாள் அன்று இந்த செக்கிற்கு அரசியல் கட்சியினர், பொதுமக்கள் மாலை அணிவித்து மரியா
Va. U. Si. Memorial Day: Permission was denied to pay tribute at the cell inside Coimbatore Central Prison. The Naam Tamilar Katchi members created a stir by garlanding the prison gate and raising slogans in protest.


Va. U. Si. Memorial Day: Permission was denied to pay tribute at the cell inside Coimbatore Central Prison. The Naam Tamilar Katchi members created a stir by garlanding the prison gate and raising slogans in protest.


கோவை, 19 நவம்பர் (ஹி.ச.)

கோவை மத்திய சிறைச் சாலை வளாகத்தில் சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனார் இழத்த செக்கு வைக்கப்பட்டு உள்ளது.

அவரின் பிறந்த நாள் மற்றும் நினைவு நாள் அன்று இந்த செக்கிற்கு அரசியல் கட்சியினர், பொதுமக்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவது வழக்கம்.

இந்த நிலையில் கோவை வ.உ.சி. மைதானத்தில் சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனாருக்கு முழு உருவச்சிலை சமீபத்தில் அமைக்கப்பட்டது. இதை அடுத்து அரசியல் கட்சியினர் இந்த சிலைக்கு மாலை அணிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் வ.உ.சி தம்பரனாரின் நினைவு தினத்தை முன்னிட்டு கோவை மத்திய சிறைச் சாலை வளாகத்தில் உள்ள செக்கிற்கு நாம் தமிழர் கட்சியினர் மாலை அணிவிக்க சென்றனர்.

அவர்களை போலீசார் உள்ளே விடாமல் தடுத்து நிறுத்தினர். இதனால் இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதை அடுத்து நுழைவு வாயிலில் உள்ள கேட்டிற்கு அவர்கள் மாலை அணிவித்து விட்டு, போலீசாரை கண்டித்து கோஷம் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Hindusthan Samachar / V.srini Vasan