Enter your Email Address to subscribe to our newsletters

விழுப்புரம், 19 நவம்பர் (ஹி.ச.)
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே உள்ள வீடூர் அணை 89 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டது.
இந்த அணை 1959 ஆம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்வர் காமராசரால் திறந்து வைக்கப்பட்டது. அணையின் மொத்த நீளம் அகலம் முறையாக 15,800 அடி மற்றும் 37 அடி ஆகும்.
அணையின் மொத்தக் கொள்ளளவு 32 அடியாகும். 3200 ஏக்கர் நிலம் பாசன வசதி பெரும் வகையில் அமைந்துள்ள இந்த அணையின் பிரதான கால்வாய் 176 கி. மீ நீளம் கொண்டதாகும். இந்த அணை தமிழக அரசின் பொதுபணித்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது.
இந்நிலையில் வீடூர் அணையில் இருந்து பாசனத்திற்காக 135 நாட்களுக்கு 328.560 மில்லியன் கன அடி நீர் திறக்கப்படுகிறது. வீடூர் அணையில் இருந்து இன்று (நவ 19) முதல் அடுத்த ஆண்டு ஏப்.2 வரை 135 நாட்களுக்கு நீர் திறக்கப்படுகிறது. அணை திறப்பு மூலம் திண்டிவனம், வானூர் வட்டப் பகுதிகளில் 3,200 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்று நீர்வளத் துறை தெரிவித்துள்ளது.
வீடூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் ஆற்றுப் பகுதிகளுக்கு யாரும் செல்ல வேண்டாம், எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை மேய்க்க, குளிப்பாட்ட ஓட்டிச் செல்லக்கூடாது என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
Hindusthan Samachar / vidya.b