கங்கை நீர் பொங்கிவரும் ஸ்ரீதர ஐயாவாள் மடம் - இன்று பக்தர்கள் புனித நீராடல்!
கும்பகோணம், 19 நவம்பர் (ஹி.ச.) கும்பகோணத்தில் உள்ள திருவிடைமருதூர் அருகே திருவிசை நல்லூரில் உள்ள ஸ்ரீதர் ஐயாவாள் மடத்தில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் அமாவசை தினத்தன்று கங்கை பொங்கிவருவதாக அப்பகுதி மக்கள் இடையே ஒரு ஐதீகம் உள்ளது. அதனை நினைவ
கங்கை நீர் பொங்கிவரும் ஸ்ரீதர ஐயாவாள் மடம் - இன்று பக்தர்கள் புனித நீராடல்!


கும்பகோணம், 19 நவம்பர் (ஹி.ச.)

கும்பகோணத்தில் உள்ள திருவிடைமருதூர் அருகே திருவிசை நல்லூரில் உள்ள ஸ்ரீதர் ஐயாவாள் மடத்தில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் அமாவசை தினத்தன்று கங்கை பொங்கிவருவதாக அப்பகுதி மக்கள் இடையே ஒரு ஐதீகம் உள்ளது.

அதனை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் அமாவசை தினத்தன்று அங்கு புனித நீராடல் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

இதனால் பக்தர்கள் பல இடங்களிலிருந்து புனித நீராடல் நிகழ்ச்சியில் கலந்து கொள்வர்.

இன்று (நவ 19) கார்த்திகை மாதம் அமாவாசை தினம் என்பதால் அதிகாலையில் இருந்தே ஏராளமானோர் தித்தார் ஐயாவாள் மடத்திலுள்ள கிணற்றில் நீராடி வருகின்றனர். இதற்காக தமிழ்நாட்டில் இருந்து பல்வேறு பகுதியிலிருந்தும் பக்தர்கள் இங்கு வந்துள்ளனர்.

சுமார் ஒரு கிலோமீட்டர் தூர நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் நீராடி வருகின்றனர்.

நீராடலுக்கு பின்னர் பக்தர்கள் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

Hindusthan Samachar / vidya.b