Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 20 நவம்பர் (ஹி.ச.)
கோவை மாவட்டம் மதுக்கரை வனச்சரகத்திற்குட்பட்ட வனப் பகுதி கேரள மாநில எல்லையை ஒட்டி அமைந்துள்ளதால் இந்த பகுதியில் எப்போதும் வன விலங்குகளின் நடமாட்டம் காணப்படும்.
குறிப்பாக யானைகள், சிறுத்தைகள் அதிக அளவில் உள்ளதால் இவை இரவு நேரங்களில் உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப்பகுதியை விட்டு வெளியே வருவது வழக்கம்.
இந்நிலையில் கடந்த 12ம் தேதி வனப்பகுதியில் இருந்து வெளியேறிய சிறுத்தை ஒன்று 15 கி.மீ தொலைவில் உள்ள இருகூர் பகுதிக்கு வந்துள்ளது.
பின்னர் நொய்யல் ஆற்றுப்பகுதிக்கு அருகில் உள்ள தனியார் மோட்டார் கம்பெனிக்குள் நுழைந்துள்ளது பின்னர் அந்த பகுதிக்குள் உலா வந்த சிறுத்தை அங்கிருந்து வெளியே சென்றது.
அப்போது இரவு பணியில் இருந்த காவலர் சிறுத்தை வந்ததை கவனிக்கவில்லை, இந்த நிலையில் தனியார் கம்பெனிக்குள் சிறுத்தை வந்து செல்லும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
இது குறித்து தகவல் அறிந்த கோவை வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று சிறுத்தை நடமாட்டம் குறித்து ஆய்வு செய்தனர்.
மேலும் தற்போது அங்கே சிறுத்தை இருப்பதற்கான அறிகுறிகள் ஏதும் இல்லை என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Hindusthan Samachar / V.srini Vasan