Enter your Email Address to subscribe to our newsletters

தென்காசி, 20 நவம்பர் (ஹி.ச.)
தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இரவு கொட்டித் தீர்த்த கனமழையின் காரணமாக மாவட்டத்தில் உள்ள பல்வேறு நீரோடைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகளுக்கு தண்ணீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து காணப்பட்டு வருகிறது.
அந்த வகையில், தென்காசி மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய அணைகளில் ஒன்றான மேக்கரை, அடவிநயினார் கோவில் நீர்த்தேக்கமானது இந்த வருடத்தில் மட்டும் 5-வது முறையாக தனது முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிந்து வருகிறது.
இதன் காரணமாக, அணைக்கு வரும் சுமார் 155 கன அடி நீரானது அப்படியே வெளியேற்றம் செய்யப்பட்டு வரும் நிலையில், அனுமன் நிதி ஆற்றில் வெள்ளப்பெருக்கானது ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக, ஆற்றுப்படுகைகள் அருகே யாரும் சொல்ல வேண்டாம் பொதுப்பணித்துறை சார்பில் அறிவுறுத்தல் செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது பிசான சாகுபடியானது தென்காசி மாவட்டத்தில் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், தற்போது அணையானது தனது முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிந்து வருவதால் பிசான சாகுபடிக்கு தேவையான முழுமையான தண்ணீர் கிடைக்கும் என்பதால் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சிக்குள்ளாக்கியது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / ANANDHAN