Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 20 நவம்பர் (ஹி.ச.)
சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமத்தின் சார்பில் ரூ.20.89 கோடி செலவில் 4 முடிவுற்ற பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (20.11.2025) தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
திறந்து வைக்கப்பட்ட முடிவுற்ற திட்டப் பணிகளின் விவரங்கள்:
ஆவடி, அன்னனூர், கோணாம்பேடு அரசு உயர்நிலை பள்ளிகளில் 10.86 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 20 வகுப்பறைகள், பல்நோக்கு கூடம், அறிவியல் மற்றும் கணினி ஆய்வகங்கள், நூலகம், ஆசிரியர் அறைகள், அலுவலகம், நவீன கழிப்பறை வசதி உள்ளிட்ட பள்ளிக் கட்டடங்கள்;
கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி வளாகத்தில் 4.47 கோடி ரூபாய் செலவில், 4,100 சதுர அடியில் கட்டப்பட்டுள்ள பழங்கள், காய்கறிகள் மற்றும் தானியங்களுக்கான 6 குளிர்சாதன சேமிப்பு கிடங்குகள்; புழல், மேட்டுபாளையம், சீனிவாசன் தெருவில் உள்ள கால்பந்து மைதானத்தில், 4.27 கோடி ரூபாய் செலவில், பார்வையாளர்கள் இருக்கை பகுதி, வீரர்களுக்கான அறை, உடற்பயிற்சி கூடம் மற்றும் நவீன கழிப்பறை வசதிகளுடன் மேம்படுத்தப்பட்ட கால்பந்து மைதானம்;
சேத்துப்பட்டு, அப்பாசாமி தெருவில் உள்ள சிறிய கால்பந்து மைதானத்தில் 1.29 கோடி ரூபாய் செலவில், பார்வையாளர்கள் இருக்கை பகுதி, வீரர்களுக்கான அறை மற்றும் நவீன கழிப்பறை வசதிகளுடன் மேம்படுத்தப்பட்ட சிறிய கால்பந்து மைதானம்; என மொத்தம் 20 கோடியே 89 இலட்சம் ரூபாய் செலவில் 4 முடிவுற்ற திட்டப் பணிகளை முதலமைச்சர் திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள் துறை அமைச்சரும், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான பி.கே.சேகர்பாபு, தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திருமதி காகர்லா உஷா, சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் உறுப்பினர் செயலர்/முதன்மைச் செயலாளர் கோ.பிரகாஷ், ஆகியோர் கலந்து கொண்டனர்.
Hindusthan Samachar / vidya.b