Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 20 நவம்பர் (ஹி.ச)
சென்னை துறைமுகம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கொத்தவால்சாவடி பகுதியில் மின்மாற்றி பாதுகாப்பு மறைப்பு வேலி அமைக்கும் பணியினை அமைச்சர் சேகர்பாபு, மேயர் பிரியா ராஜன், நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
பெருநகர சென்னை மாநகராட்சி மூலதன நிதியில் இருந்து ரூபாய் 3 கோடியே 95 லட்சம் மதிப்பீட்டில மண்டலம் 5-ற்குட்பட்ட வார்டுகள் 54,55,56,57,59,60 உள்ளிட்ட தெருக்களில் மின் மாற்றிகளை மறைப்பதற்கான வேலிகள் அமைக்கும் பணி தொடங்கி வைக்கப்பட்டது.
சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டம், சுவாமி சிவானந்தா சாலையில் எம் ஆர் டி எஸ் ரயில்வே மேம்பாலத்தின் கீழ் உள்ள பகுதியை பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் ரூபாய் 4 கோடியே 84 லட்சம் மதிப்பில் அழகுபடுத்தும் பணியை அமைச்சர் சேகர்பாபு மற்றும் மேயர் பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன்,
துறைமுகம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பெருநகர சென்னை மாநகராட்சியின் நிதியின் கீழ் ரூபாய் 10 கோடி மதிப்பீட்டில் மின் மாற்றி தடுப்பு வேலிகள்,எம் ஆர் டி எஸ் ரயில்வே மேம்பாலங்களுக்கு கீழ் அழகு படுத்தும் பணி உள்ளிட்ட திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளது.
இந்தியாவிலேயே வளர்ந்து வரும் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது ஆனால் அதனை விடுத்து ஆந்திராவிற்கு நிதி கொடுக்கின்றனர். கோயம்புத்தூர்,மதுரை மெட்ரோ தொடர்பாக தமிழக அரசிடம் மத்திய அரசு விளக்கம் கேட்டு கடிதமாவது கொடுத்திருக்க வேண்டும்.
பிரதமர் தமிழ்நாட்டிற்கு வரும்போது நல்ல அறிவிப்புகள் வெளிவர வேண்டும் ஆனால் அவர் வந்து செல்லும் போதெல்லாம் வஞ்சிக்கின்ற அறிவிப்புகள் தான் வெளி வருகிறது.
தமிழ்நாட்டிற்கு வஞ்சிக்கின்ற அறிவிப்புகள் வரும் போதெல்லாம் அதனை எதிர்கின்ற ஒரே கட்சி திமுக தான் எனவும் எதிர்த்து கேள்விகளுக்கும் ஒரே முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் தான் எனவும் தெரிவித்தார்.
திமுகவின் பொய் தொழில் முதலீடுகள் என்ற அன்புமணி ராமதாஸின் குற்றச்சாட்டு தொடர்பான கேள்விக்கு,
அன்புமணியை முதலில் அவங்க அப்பாவை பார்க்க சொல்லுங்கள்.அப்பாவுக்கு மரியாதை கொடுக்க சொல்லுங்கள்.
அவர் அப்பாவே தன்னை கொலை பண்ண பார்க்கிறார் என்று சொல்கிறார் அந்த குற்றச்சாட்டு உங்களுக்கு (அன்புமணிக்கு) அவமானமாக இல்லையா? என கேள்வி எழுப்பினார்.
Hindusthan Samachar / P YUVARAJ