Enter your Email Address to subscribe to our newsletters

திருநெல்வேலி, 20 நவம்பர் (ஹி.ச)
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் திருநெல்வேலியில் இன்று (நவ 20) செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசியதாவது,
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து, போதைப் பொருள் கலாச்சாரம் பரவலாகி வருகிறது. கடந்த இரண்டு நாட்களில் நான்கு கொலைகள் இடம்பெற்றுள்ளன. பெண்களுக்கு எதிரான வன்முறைகள் 60% உயர்ந்துள்ளன. பாலியல் குற்றங்கள் 53% அதிகரித்துள்ளன. தமிழகம் தற்கொலை தலைநகரமாகிறது.
காவல்துறைக்கு எதிரான 14 தாக்குதல்கள் நடந்துள்ளன. கள்ளக்குறிச்சியில் 63 பேரும், கரூரில் 41 பேரும் கள்ளச்சாராயத்தால் உயிரிழந்த சம்பவங்கள் நிகழ்ந்தன. கோவை மற்றும் மதுரை மெட்ரோ திட்ட அறிக்கையை தமிழக அரசு தவறாக அளித்ததால், மத்திய அரசு DPR-ஐ திருப்பி அனுப்பியுள்ளது. கோவை மெட்ரோ வரக்கூடாது என்பதற்காகத் திட்ட அறிக்கையே மாறுபடுத்தப்பட்டது
முதல்வர் ஸ்டாலின், திருநெல்வேலிக்கு மெட்ரோ ரயில் கொண்டு வருவேன் என்ற வாக்குறுதியை ஏன் நினைவுகூரவில்லை? திட்டம் நிராகரிக்கப்படவில்லை; 2026 ஜூன் மாதத்தில் கோவை, மதுரைக்கு மெட்ரோ வந்துவிடும். மின் கட்டணம் 300% உயர்த்தப்பட்டுள்ளது.
பஸ் இலவச பயணம் தேவையில்லை.சதுர அடிக்கு ரூ.600 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. நீட் தேர்வை ரத்து செய்வதாகக் கூறிய ஆட்சி அதை நிறைவேற்றவில்லை.
இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
Hindusthan Samachar / vidya.b