Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 20 நவம்பர் (ஹி.ச)
சென்னை மயிலாப்பூரில் உள்ள சாந்தோம் பள்ளியில் பசுமைப் பயணம் விழிப்புணர்வு மிதிவண்டி பேரணி நிறைவு விழா நடை பெற்றது.
இவ் விழாவில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார்.
பசுமை பயணம் மிதிவண்டி விழிப்புணர்வு பேரணி நவம்பர் 5ஆம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கியது.நவம்பர் 20 இன்று காலை சென்னை மெரினா கடற்கரையில் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நிறைவு பெற்றது. பிளாஸ்டிக் ஒழிப்பு, நீர் ஆதாரங்கள் பாதுகாப்பு, மரக்கன்றுகள் நடுதல் உள்ளிட்டவை விழிப்புணர்வு பிரச்சாரமாக மேற்கொள்ளப்பட்டது.
தமிழக துறவியர் பேரவை, அய்க்கப் இயக்கத்தின் சார்பில் பேரணி ஏற்பாடு செய்யப்பட்பட்டது.சுமார் 1000 கிலோமீட்டர் நடைபெற்ற இந்த பேரணியில் 10 மாணவர்களும்,2 மாணவிகளும் பங்கேற்றனர்.
இந்நிகழ்வினைத் தொடர்ந்து,மேடையில் பேசிய தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,
நாம் அனைவரும் காற்றை சுவாசிக்கின்றோம் அதில் எந்தவிதமான சிரமமும் இல்லை இயற்கையாகவே கிடைத்துக் கொண்டிருக்கிறது.அந்த காற்று நம்மை சுற்றி இருக்கிற மரங்கள் மூலமாக கிடைக்கிறது ஒருவேளை எதிர்காலத்தில் காற்று பற்றாக்குறை ஏற்பட்டால் நம் நிலைமை என்ன ஆகும் என்று யோசித்துப் பார்க்க வேண்டும்.
கொரோனா களத்தில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை எந்த அளவிற்கு இருந்தது என்பதை நாம் கண்டிப்பாக பார்க்க வேண்டும். இதை உணர்ந்து நம் ஒவ்வொருத்தரும் இயற்கையை பாதுகாக்க வேண்டும் மரங்களை வளர்க்க வேண்டும்.
இந்தியாவின் தலைநகர் டெல்லியில் கடுமையான சுவாச பிரச்சனை இருக்கிறது தமிழ்நாட்டை பொறுத்த அளவிற்கு நாம் பாதுகாப்பான ஒரு இடத்தில் இருந்து கொண்டிருக்கிறோம்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு விஷயத்தில் இளைஞர்கள் குழந்தைகள் நீங்கள் மிகவும் அக்கறையாக இருப்பது மகிழ்ச்சிக்குரிய ஒரு விஷயம்.இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இளைஞர்கள் மாணவ செல்வங்களுக்கு என்னுடைய பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்.
வருகின்ற காலங்களில் நம் தலைமுறை இயற்கை பாதுகாப்போம் விஷயத்தில் அலார்ட்டாக இருப்பார்கள் என்று நினைக்கிறேன்.பெரியவர்கள் குப்பையை ரோட்டில் தூக்கி போட்டு விட்டு போவார்கள் ஆனால் குழந்தைகள் என்றும் அப்படி செய்வதில்லை.
உலகத்தில் மிகப்பெரிய அச்சுறுத்தலாக பிரச்சனையாக சுற்றுச்சூழல் பிரச்சனை இருக்கிறது.தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறக்கூடிய புகையினால் குளோபல் வாம்மிங் ஏற்படுகிறது.
இன்றைக்கு நாம் அதிகமாக எலக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்த ஆரம்பித்திருக்கிறோம் இது சுற்றுச்சூழலுக்கு நல்லது.சோலார் எனர்ஜி விண்ட் எனர்ஜி என்ன தமிழ்நாடு அரசு கூடுதல் கவனம் செலுத்தி இந்தியாவில் சுற்றுச்சூழலை பாதுகாக்க அதிகம் முன்னெடுப்புகளை எடுக்கின்ற மாநிலமாக தமிழ்நாடு என பெருமையோடு சொல்லிக் கொள்கிறேன்.
நமக்கு பசுமையான சூழல் வேணுமா? அல்லது வறட்சியான சூழல் வேணுமா என்பதை நம் ஒவ்வொருவருடைய செயல்பாட்டில் தான் இருக்கிறது.
ஒட்டுமொத்த தமிழ்நாட்டை பசுமை வழியில் அழைத்துச் சென்ற நாம் அனைத்து முயற்சிகளையும் எடுப்போம்.
இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
Hindusthan Samachar / P YUVARAJ