மல்லை சத்யா தொடங்கிய திராவிட வெற்றிக் கழகம்!
சென்னை, 20 நவம்பர் (ஹி.ச.) மதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா திராவிட வெற்றிக் கழகம் என்ற பெயரில் புதுக் கட்சி ஒன்றைத் தொடங்கி உள்ளார். திராவிட முன்னேற்றக் கழகம், தமிழக வெற்றிக் கழகம் போல, திராவிட வெற்ற
Diravida Vettri Kazhagam


சென்னை, 20 நவம்பர் (ஹி.ச.)

மதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா திராவிட வெற்றிக் கழகம் என்ற பெயரில் புதுக் கட்சி ஒன்றைத் தொடங்கி உள்ளார்.

திராவிட முன்னேற்றக் கழகம், தமிழக வெற்றிக் கழகம் போல, திராவிட வெற்றிக் கழகம் என்ற பெயரில் இந்தக் கட்சி தொடங்கப்பட்டு உள்ளது.

சென்னை, அடையாறில் தனது ஆதரவாளர்கள் முன்னிலையில், இன்று (நவம்பர் 20) கட்சியின் பெயரை அறிவித்தார் மல்லை சத்யா.

தனிக்கட்சி தொடங்கினாலும், தேர்தலில் தனது ஆதரவு திமுக கூட்டணிக்கே என்று ஏற்கெனவே மல்லை சத்யா அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தவெகவுக்கு போட்டியாக திவெக என்று எத்தனை பெயரில் எவ்வளவு கட்சிகளை இறக்கினாலும் எங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று தமிழக வெற்றிக் கழக நெட்டிசன்கள், கருத்துக் கூறி வருகின்றனர்.

Hindusthan Samachar / ANANDHAN