Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 20 நவம்பர் (ஹி.ச)
சென்னை மந்தைவெளி மார்க்கெட் பகுதியில் வசித்து வருபவர் சரளா 59 வயதான சரளா வாடகை வீட்டில் தனியாக வசித்து வருகிறார். .
இந்த நிலையில் இன்று காலை சரளா வீட்டில் பூஜை அறையில் பூஜை செய்துவிட்டு பிறகு வீட்டை பூட்டிவிட்டு கடைக்கு சென்று உள்ளார்.
இந்த நிலையில் அவர் கடைக்கு சென்ற சில நிமிடங்களில் வீட்டு ஜன்னலில் இருந்து கரும் புகையும், தீயும் வெளியேறியதை பார்த்த அங்கிருந்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைவதற்குள்ளாகவே அங்கு தனியார் தொலைத்தொடர்பு நிறுவனத்தை சேர்ந்த ஊழியர்கள் கேபிள் பணியில் ஈடுபட்டிருந்த நிலையில் தீ பற்றி எரிவதை பார்த்து உடனடியாக வீட்டின் கதவை உடைத்து அருகாமையில் இருந்த தொட்டியில் இருந்த தண்ணியை பீச்சி அடித்து உரிய நேரத்தில் துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்துள்ளனர். மேலும் சமையல் அறையில் இருந்த சிலிண்டரையும் உடனடியாக பத்திரப்படுத்திய நிலையில் பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.
தீ விபத்து ஏற்பட்ட பகுதி குறுகிய சாலை என்பதால் தீயணைப்பு வாகனம் விரைவதற்குள்ளாக துரிதமாக செயல்பட்ட அந்த நபர்கள் தீயை 50 சதவீதமரை அனைத்து உள்ளனர்.
பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த மயிலாப்பூர் தீயணைப்பு துறையினர் விரைந்து செயல்பட்டே தீயை முழுவதுமாக அணைத்தனர்.
மேலும் இந்த தீ விபத்து தொடர்பாக தீயணைப்பு துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் பூஜை அறையில் ஏற்றி வைத்திருந்த விளக்கின் மூலம் தீ பற்றி இருக்கலாம் எனவும் அதே போல் வீட்டில் இருந்த குளிர்சாதன கருவியின் கேபிள்கள் பழுதடைந்த நிலையில் இருந்ததால் மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனவும் சந்தேககின்றனர். தீ விபத்துக்கான காரணங்களை தீயணைப்புத் துறையினர் தீவிர ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த தீ விபத்தின் காரணமாக வீட்டில் இருந்த மொத்த உடமைகளும் தீயில் கருகி சேதமடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் உரிய நேரத்தில் தீயணைத்த அந்த டேட்டா கேபிள் நிறுவன ஊழியர்களுக்கும் துரிதமாக செயல்பட்டதற்காக தீயணைப்பு துறையினர் பாராட்டுகளை தெரிவித்தனர்.
சென்னை மந்தவெளி மார்க்கெட் பகுதியில் ஏற்பட்ட இந்த தீ விபத்தினால் அந்த பகுதியில் சிறிது நேரத்திற்கு பரபரப்பு ஏற்பட்டது.
Hindusthan Samachar / P YUVARAJ