உலகத்தில் கஷ்டமில்லாத தொழில், கவர்னர் வேலை பார்ப்பது - கலைஞரின் பதிலை நினைவு கூர்ந்த கனிமொழி எம்.பி
சென்னை, 20 நவம்பர் (ஹி.ச.) மசோதா மீது முடிவெடுக்க, ஜனாதிபதி மற்றும் கவர்னர்களுக்கு காலக்கெடு நிர்ணயிக்க முடியாது என்று சுப்ரீம் கோர்ட் அரசியல் சாசன பெஞ்ச் இன்று நவ.,20ல் தீர்ப்பளித்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள கனிமொழி எம்.பி எக
உலகத்தில் கஷ்டமில்லாத தொழில், கவர்னர் வேலை பார்ப்பது - கலைஞரின் பதிலை நினைவு கூர்ந்த  கனிமொழி எம்.பி


சென்னை, 20 நவம்பர் (ஹி.ச.)

மசோதா மீது முடிவெடுக்க, ஜனாதிபதி மற்றும் கவர்னர்களுக்கு காலக்கெடு நிர்ணயிக்க முடியாது என்று சுப்ரீம் கோர்ட் அரசியல் சாசன பெஞ்ச் இன்று நவ.,20ல் தீர்ப்பளித்துள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள கனிமொழி எம்.பி எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது,

உலகத்தில் கஷ்டமில்லாத தொழில் எது?” என்று கேட்டபோது, “கவர்னர் வேலை பார்ப்பது” என்று தலைவர் கலைஞர் அவர்கள் பதிலளித்தார்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசு, தனது மக்களுக்கான உரிமைகளைக் காத்திடவும் மாநில நலன்களைப் பாதுகாக்கவும் சட்டமன்றத்தில் இயற்றி அனுப்பும் மசோதாக்களை, காலம் தாழ்த்தாமல் முத்திரையிட்டு டெல்லிக்கு அனுப்புவது என்னும் எளிய பணியை மட்டுமே ஆளுநருக்கு அரசமைப்புச் சட்டம் கொடுத்துள்ளது. இன்று உச்சநீதிமன்றமும் மீண்டும் அதை உறுதிப்படுத்தியுள்ளது.

இனியேனும் அரசமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டு, ஆளுநர் அவர்கள் அப்பணியை செவ்வனே செய்வார் என்று நம்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Hindusthan Samachar / vidya.b