Enter your Email Address to subscribe to our newsletters

பாட்னா, 20 நவம்பர் (ஹி.ச.)
பீகாரின் முதல்வராக நிதிஷ் குமார் இன்று 10-வது முறையாக பதவியேற்கிறார்.
காந்தி மைதானத்தில் நடைபெறவிருக்கும் இந்த பதவியேற்பு விழா காலை 11:30 மணிக்கு தொடங்க உள்ளது.
நிதிஷ் குமாருடன், பாஜகவைச் சேர்ந்த மேலும் 2 துணை முதல்வர்களும் பதவியேற்க உள்ளனர்.
இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு அமைச்சர் அமித் ஷா மற்றும் பல முக்கிய தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
முதல்வர் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளும் முதல் பிரதமர் மோடி ஆவார்.என்பது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு, எப்போதும் இல்லாத அளவுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
காந்தி மைதானம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சிறப்பு பாதுகாப்பு குழு (SPG), தேசிய பாதுகாப்பு படை (NSG) மற்றும் பீகார் காவல்துறையின் கூட்டுக் குழுக்கள் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற் கொண்டுள்ளன.
இந்தப் பதவியேற்பு விழாவில் ஆயிரக்கணக்கான மக்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், தனித்தனி நுழைவு மற்றும் வெளியேறும் வழிகளை ஏற்படுத்தி உள்ளது.
பதவி ஏற்பு விழா நடைபெறும் காந்தி மைதானத்தில் 100,000 - க்கும் மேற்பட்ட மக்கள் அமரும் வகையில் தயார் செய்யப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / Dr. Vara Prasada Rao PV