சேலத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்ய தவெக தலைவர் விஜய்க்கு அனுமதி மறுப்பு
சேலம், 20 நவம்பர் (ஹி.ச.) தவெக தலைவர் விஜய் கரூரில் பிரசாரம் செய்தபோது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து இடைக்காலமாக தனது பிரச்சாரத்தை நிறுத்தி வைத்த விஜய் சேலத்தில் இருந்து மீண்டும் பிரசாரத்தை தொடங்க திட்டமிட்டார்.
சேலத்தில் தவெக தலைவர் விஜய் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு


சேலம், 20 நவம்பர் (ஹி.ச.)

தவெக தலைவர் விஜய் கரூரில் பிரசாரம் செய்தபோது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.

இதனை தொடர்ந்து இடைக்காலமாக தனது பிரச்சாரத்தை நிறுத்தி வைத்த விஜய் சேலத்தில் இருந்து மீண்டும் பிரசாரத்தை தொடங்க திட்டமிட்டார்.

அதன்படி இன்று (நவ 20) சேலம் காவல் ஆணையரிடம் விஜய் பிரசாரத்திற்கு அனுமதி கேட்டு தவெக நிர்வாகிகள் மனு அளித்துள்ளனர்.

அடுத்த மாதம் 4 ஆம் தேதி சேலத்தில் பிரசாரம் செய்ய போஸ் மைதானம், கோட்டை மைதானம், கெஜ்ஜல்நாயக்கன்பட்டி ஆகிய இடங்களை குறிப்பிட்டு தவெக மனு அளித்தது.

இந்நிலையில் சேலத்தில் 4-ஆம் தேதி தவெக தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொள்ள அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

கார்த்திகை தீப பணிகள் உள்ளதால் பிரசாரத்திற்கு பாதுகாப்பு கொடுக்க இயலாது என்றும், 4-ம் தேதி தவிர்த்து மற்ற நாட்களில் அனுமதி தர தயார் என்றும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டதாக சேலம் மத்திய மாவட்ட செயலாளர் பார்த்திபன் தகவல் தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / vidya.b