Enter your Email Address to subscribe to our newsletters

புதுச்சேரி, 20 நவம்பர் (ஹி.ச.)
புதுச்சேரி அரசு நிறுவனமான பாண்லே, உற்பத்தியாளர்களிடமிருந்து பாலை கொள்முதல் செய்து நுகர்வோருக்கு விற்பனை செய்கிறது.
பாண்லேவில் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுவதால் புதுச்சேரி மட்டுமின்றி வெளி மாநில மக்களும் விரும்பி வாங்கும் பாண்லே பொருளுக்கு ஏகோபித்த வரவேற்பும் உள்ளது.
இந்நிலையில் திடீரென பாண்லே நிறுவன பால் பொருட்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
அதன்படி, நெய் 100 மில்லி ரூ.85ல் இருந்து ரூ.90 ஆகவும், 200 மில்லி ரூ.150ல் இருந்து ரூ.170 ஆகவும், 500 மில்லி ரூ.346ல் இருந்து ரூ.390 ஆகவும் உயர்ந்துள்ளது. வெண்ணை 200 கிராம் ரூ.150ல் இருந்து 155 ஆகவும், 500 கிராம் ரூ.272ல் இருந்து ரூ.300 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
பன்னீர் 100 கிராம் ரூ.48ல் இருந்து ரூ.50 ஆக உயர்ந்துள்ளது.ஒரு கிலோ பன்னீர் ரூ.400ல் இருந்து ரூ.425 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN