Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 20 நவம்பர் (ஹி.ச.)
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர்,
இராமநாதபுரத்தில் மாணவி படுகொலை செய்யப்பட்டதை புதிய தமிழகம் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. கட்டாய காதலை தடுக்கும் வகையிலும் ஆணவ கொலைகளை தடுக்க உருவாக்கும் சட்டத்தில் சட்டத்தை உருவாக்க வேண்டும்.
பல இடங்களில் சாதியா மனப்பான்மை உடன் தலித் மக்களுக்கு எந்த வித அடிப்படை வசதியும் செய்து தர மறுக்கிறார்கள்.
ஒரு மாத கால அவகாசத்தில் இந்த பணியை செய்து முடிக்க முடியுமா? என்கிற கேள்வி எழுகிறது.
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினரிடம் இந்த படிவங்கள் கொடுப்பதால் பல இடங்களில் முறைகேடு நடைபெறுவதாக எங்களுக்கு தகவல் வருகிறது.
மாநில அரசு அதிகாரிகள் மட்டுமல்லாமல் மத்திய அரசின் பணியாளர்களையும் SIR பணிகளில் ஈடுபடுத்தினால் பணி விரைவில் முடியும் அரசின் நோக்கம் நிறைவேறும் என நான் நம்புகிறேன்.
எந்த அரசியல் கட்சியும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி அவர்கள் தவறிழைத்து விட கூடாது என்பதை தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பீகாரில் பெண்கள் அதிக அளவில் NDA கூட்டணிக்கு ஆதரவு அளித்துள்ளார்கள். பீகாரை பார்த்து தமிழக அரசியல் வாதிகள் மிக முக்கியமான பாடத்தை கற்றுக் கொள்ள வேண்டும்.
கூட்டணி அமைச்சரவை என்பதை பீகாரில் அமைக்கிறார்கள், தமிழ்நாட்டில் பல ஆண்டுகளாகவே ஒரு கட்சி ஆட்சி முறை மட்டும் இருந்து வருகிறது. அதற்குவொரு முடிவு கட்ட வேண்டும்.
தமிழ்நாட்டில் உடனடியாக பூரண மதுவிலக்கை அமுல்படுத்த வேண்டும்.
ஆட்சியில் பங்கு கொடுப்போம் என அறிவித்துள்ள தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளதா?
எங்கள் கூட்டணி நிலைப்பாட்டை ஜனவரி 7 ஆம் தேதி தெரிவிக்கிறேன். 2026 ஆம் ஆண்டு தேர்தலுக்கு பீகார் தேர்தல் ஃபார்முலா தான் சரியாக இருக்கும்.
அவசியமே இல்லாமல் SIR க்கு எதிராக திமுகவினர் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
பல சிக்கல்கள் இருக்கிறது அதை தேர்தல் ஆணையம் சரி செய்ய வேண்டும்.
ஒரு தகுதியான வாக்காளர் கூட விடுபட கூடாது என்றார்.
Hindusthan Samachar / P YUVARAJ