Enter your Email Address to subscribe to our newsletters

ராமநாதபுரம், 20 நவம்பர் (ஹி.ச.)
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் கடல் அட்டை கடத்தல் தொடர்பாக கிடைத்த ரகசிய தகவலினைத் தொடர்ந்து போலீசார் மற்றும் வனத்துறையினர் இணைந்து நடத்திய திடீர் சோதனையில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பதப்படுத்தப்பட்ட கடல் அட்டை பறிமுதல் செய்யப்பட்டது.
சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கீழக்கரை போலீசார் மற்றும் வனத்துறையினர் தலைமையிலான குழு, ரகசிய தகவலின் அடிப்படையில் கீழக்கரையைச் சேர்ந்த முகம்மது மீரா சாகிபு என்பவரின் இல்லத்தில் சோதனை நடத்தியது.
அப்போது, 13 மூட்டைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 400 கிலோ எடையுடைய பதப்படுத்தப்பட்ட கடல் அட்டை கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ.40 லட்சத்திற்கு மேல் இருப்பதாக ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
தடைசெய்யப்பட்ட கடல் அட்டையை சட்டவிரோதமாக வைத்திருந்ததாக முகம்மது மீரா சாகிபு கைது செய்யப்பட்டார்.
பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் கீழக்கரை வன சரக அலுவலகத்திற்கு ஒப்படைக்கப்பட்டன. இதையடுத்து அவர்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு மேலான விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
இந்த கடல் அட்டை எங்கிருந்து பெற்றார்? இலங்கைக்கு வடகம் மூலம் கடத்திச் செல்வதற்காக பதுக்கி வைத்திருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது அதனை தொடர்ந்து மேலும் விசாரணையை வனத்துறையினரும் காவல்துறையினரும் மேற்கொண்டு வருகின்றனர்.
Hindusthan Samachar / ANANDHAN