முத்தரப்பு டி20 தொடரில் இன்று நடைபெறும் 2வது ஆட்டத்தில் இலங்கை, ஜிம்பாப்வே அணிகள் மோதல்
ராவல்பிண்டி, 20 நவம்பர் (ஹி.ச.) பாகிஸ்தான், ஜிம்பாப்வே மற்றும் இலங்கை கிரிக்கெட் அணிகள் இடையிலான முத்தரப்பு டி20 தொடர் பாகிஸ்தானில் நடைபெறுகிறது. இதில் நடந்த முதல் ஆட்டத்தில் ஜிம்பாப்வேயை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் அபார வ
முத்தரப்பு டி20 தொடரில் இன்று நடைபெறும் 2வது ஆட்டத்தில் இலங்கை, ஜிம்பாப்வே அணிகள் மோதல்


ராவல்பிண்டி, 20 நவம்பர் (ஹி.ச.)

பாகிஸ்தான், ஜிம்பாப்வே மற்றும் இலங்கை கிரிக்கெட் அணிகள் இடையிலான முத்தரப்பு டி20 தொடர் பாகிஸ்தானில் நடைபெறுகிறது.

இதில் நடந்த முதல் ஆட்டத்தில் ஜிம்பாப்வேயை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் அபார வெற்றி பெற்றது.

இந்நிலையில், முத்தரப்பு டி20 தொடரில் இன்று நடைபெறும் 2வது ஆட்டத்தில் இலங்கை, ஜிம்பாப்வே அணிகள் மோதுகின்றன.

இந்திய நேரப்படி இன்று மாலை 6.30 மணிக்கு ஆட்டம் தொடங்குகிறது.

ராவல்பிண்டியில் இந்த ஆட்டம் நடைபெற உள்ளது.

Hindusthan Samachar / JANAKI RAM