Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 20 நவம்பர் (ஹி.ச.)
சென்னையை தொடர்ந்து, மதுரை, கோவை உள்ளிட்ட நான்கு நகரங்களில், மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த, தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
அதாவது, மதுரையில் திருமங்கலம் - ஒத்தக்கடை இடையே, 31.93 கி.மீ., துாரத்திற்கும், கோவையில், அவிநாசி சாலையில் இருந்து கருமத்தம்பட்டி வரை உக்கடத்தில் இருந்து சத்தியமங்கலம் சாலையில் வலியம்பாளையம் பிரிவு வரை, 39 கி.மீ., துாரத்திற்கும் செயல்படுத்த தீர்மானிக்கப்பட்டது.
இரண்டு மெட்ரோ ரயில் திட்டங்களுக்கும், மத்திய அரசின் ஒப்புதல் கேட்டு, கூடுதல் ஆவணங்களுடன் திருத்தப்பட்ட திட்ட அறிக்கையை, 10 மாதங்களுக்கு முன், தமிழக அரசு அனுப்பியது.
ஆனால் மேற்கண்ட இரண்டு மெட்ரோ ரயில் திட்டங்களின் திட்ட அறிக்கையை, மத்திய அரசின் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம், தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பி உள்ளது.
இந்த நிலையில், கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களை நிராகரித்த மத்திய பாஜக அரசைக் கண்டித்து கோவை செஞ்சிலுவை சங்கம் அருகில் மதச்சார்பற்ற
முற்போக்கு கூட்டணிக் கட்சியினர் இன்று (நவ 20) காலை முதல் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
ஆர்ப்பாட்டத்தில் திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டுள்ளனர்.
தமிழ்நாட்டின் வளர்ச்சியை தடுக்கும் நோக்கோடு மத்திய பா.ஜனதா அரசு செயலாற்றி வருதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b