கோவையில் ஸ்பேஸ்ஒன் தன் விரிவாக்கத்தை மேம்படுத்தி, அதிகரித்து வரும் பணிமிட தேவையை பூர்த்தி செய்கிறது
கோவை, 20 நவம்பர் (ஹி.ச.) கேரளாவை தலைமையகத்தைக் கொண்ட SpazeOne, தென் இந்தியாவின் முன்னணி கோ-ஒர்கிங் மற்றும் மேனேஜ்ட் ஆபிஸ் நிறுவனமான திகழ்கிறது. வேகமாக வளர்ந்து வரும் முக்கிய வணிக நகரமான கோவையில் தனது புதிய மையத்தைத் தொடங்கி விரிவுபடுத்தியுள்ளது.
SpaceOn in Coimbatore is expanding its operations to meet the growing demand for workspace and office facilities in the city.


கோவை, 20 நவம்பர் (ஹி.ச.)

கேரளாவை தலைமையகத்தைக் கொண்ட SpazeOne, தென் இந்தியாவின் முன்னணி கோ-ஒர்கிங் மற்றும் மேனேஜ்ட் ஆபிஸ் நிறுவனமான திகழ்கிறது.

வேகமாக வளர்ந்து வரும் முக்கிய வணிக நகரமான கோவையில் தனது புதிய மையத்தைத் தொடங்கி விரிவுபடுத்தியுள்ளது.

நகரின் மிகப் முக்கிய வர்த்தகச் சாலைகளில் தன்னுடைய மையத்தை நிறுவியுள்ள அமைத்துள்ள ஸ்பேஸ்ஒன், நிறுவனங்கள் எளிமையான அணுகுமுறையை பெறுவதற்கு உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

SpazeOne, தகவல் தொழில்நுட்பம் (IT), BPO, மெடிக்கல் கோடிங், மீடியா, ஃபின்டெக் உள்ளிட்ட பல்வேறு வேகமாக வளர்ந்து வரும் துறைகளுக்கான நிறுவனங்களுக்கு முழுமையான 360° பணிமிட வசதிகளை வழங்குகிறது. இது தற்போது கோயம்புத்தூரில் தொடங்கியுள்ள புதிய மையத்தில் முழுமையாக மேலாண்மை செய்யப்பட்ட ஆபிஸ் ஸ்யூட்கள், தனிப்பட்ட கேபின்கள் மற்றும் நிறுவனத் தேவைகளுக்கு ஏற்ப விரிவாக்கக்கூடிய எண்டர்பிரைஸ் தளங்கள் ஆகியவை அவினாசி ரோடு, காமராஜர் ரோடு போன்ற முக்கிய வர்த்தகப் பகுதிகளில் அமைந்துள்ளன.

1 இருக்கை முதல் 1000 இருக்கைகள் வரை தொடங்கும் இப்பணிமிடங்களில் அதி வேக Wi-Fi, 24/7 பாதுகாப்பான அணுகல், எண்டர்பிரைஸ் தரம் கொண்ட மீட்டிங் ரூம்கள், ஹவுஸ்கீப்பிங் மற்றும் கஃபே வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

நவீன வடிவமைப்புகள், உடல்நலனைக் கருத்தில் கொண்ட திறம்பட செயல்பட உதவும் முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

ஸ்டார்ட்அப்கள் நிறுவனங்கள் , IT நிறுவனங்கள், உற்பத்தி சார்ந்த நிறுவனங்கள் அதிக செயல்பாட்டைக் காணும் நிலையில், நெகிழ்வான மற்றும் முழுமையாக சேவை செய்யப்பட்ட பணிமிடங்களுக்கான தேவையும் வேகமாக உயர்ந்து வருகிறது.

அவினாசி ரோடு போன்ற வளர்ச்சியடைந்த, மக்கள் நடமாட்டம் அதிகமான சாலைகளில் தனது புதிய மையத்தை அமைப்பதன் மூலம், கோயம்புத்தூரின் வேகமான வர்த்தக விரிவாக்கத்துக்கும், உருவாகி வரும் தொழில்முனைவோர் சூழலுக்கும் ஸ்பேஸ்ஒன் தன்னை இணைத்துக்கொள்கிறது.

குறிப்பாக SME குழுக்கள் மற்றும் எண்டர்பிரைஸ் செய்முறை அலுவலகக் குழுக்கள் தங்கள்இருப்பைத் திறம்படவும் விரைவாகவும் உருவாக்க உதவும் அளவுகோல் மாறக்கூடிய பணிமிடங்களை வழங்குவதே நிறுவனத்தின் நோக்கமாகும்.

ஜேம்ஸ் தோமஸ் மற்றும் சிஜோ ஜோஸ் ஆகியோரால் இணைந்து நிறுவப்பட்ட ஸ்பேஸ்ஒன், முக்கிய சந்தைகளில் உயர்தர, தொழில்நுட்பம் சார்ந்த பணிமிடங்களை அனைவருக்கும் அணுகக்கூடியதாக மாற்றும் கனவைக் கொண்டுள்ளது. வளர்ச்சியை நோக்கி செயல்படும் நிறுவனங்களுக்கு மாற்றத்திற்கேற்ப தழுவக்கூடிய ஆபிஸ் மாடல்கள், வலுவான சமூக வலையமைப்புகள் மற்றும் நவீன, முக்கிய இடங்களில் அமைந்த சூழல்களை வழங்குவதே இவர்களின் நோக்கமாகும்.

Hindusthan Samachar / V.srini Vasan