Enter your Email Address to subscribe to our newsletters

சேலம், 20 நவம்பர் (ஹி.ச.)
நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் எனும் கட்சியை நிறுவி எதிர்வரும் 2026 சட்ட மன்ற தேர்தலை கருத்தில்கொண்டு தனது களப்பணியை தொடங்கினார். விஜய் கரூரில் பிரசாரம் செய்தபோது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.
இதனால் அவர் பிரசாரத்தை தற்காலிகமாக நிறுத்தினார். இந்த நிலையில் மீண்டும் சுற்றுப்பயணத்தை மேற்கொள்ள த.வெ.க. தலைவர் விஜய் முடிவு செய்து இருக்கிறார்.
டிசம்பர் முதல் வாரத்தில், விஜய் தனது சுற்றுப்பயணத்தை மீண்டும் துவங்க உள்ளதாக தவெக கட்சி தலைமை அலுவலக வட்டாரங்கள் கூறி வந்தன. சேலம் மாவட்டத்தில் இருந்து விஜய் தனது பிரசார பயணத்தை தொடங்குவார் எனவும் தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில் இன்று
(நவ 20) சேலம் காவல் ஆணையரிடம் விஜய் பிரசாரத்திற்கு அனுமதி கேட்டு தவெக நிர்வாகிகள் மனு அளித்துள்ளனர்.
அடுத்த மாதம் 4 ஆம் தேதி பிரசாரம் செய்ய அனுமதி கோரப்பட்டுள்ளது. விஜய் பிரசாரத்திற்காக போஸ் மைதானம், கோட்டை மைதானம், கெஜ்ஜல்நாயக்கன்பட்டி ஆகிய இடங்களை குறிப்பிட்டு தவெக மனு அளித்துள்ளது.
விஜய் மீண்டும் பிரசாரம் பயணம் மேற்கொள்ள உள்ளதாக வெளியாக உள்ள தகவல்.
தவெக நிர்வாகிகள், தொண்டர்கள் இடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Hindusthan Samachar / vidya.b