Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 20 நவம்பர் (ஹி.ச.)
சென்னை, பெரியார் அறிவியல் தொழில்நுட்ப மையத்தில் உள்ள புத்தாக்க மையத்தில் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் கல்வியை ஊக்குவிக்கும் விதமாக வரும் டிசம்பர் மாத இறுதி வாரத்தில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையில் காலை 10.30 முதல் மாலை 4.30 வரை12 வார பயிற்சி வகுப்புகள் நடைபெறவுள்ளன.
இந்த பயிற்சியில் 7 முதல் 9ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் கலந்துகொள்ளலாம். பயிற்சி கட்டணம் ரூ.4000. 60 மாணவர்கள் வரை பயிற்சியில் கலந்துகொள்ளலாம். ஏஎல்டி திட்டத்திலுள்ள அரசு பள்ளியில் பயிலும் 10 மாணவர்கள் இலவச பயிற்சி அளிக்கப்படும்.
விருப்பமுள்ள மாணவர்கள் tnstc.science@gmail.com < mailto:tnstc.science@gmail.com > என்ற மின்அஞ்சல் அல்லது 044-29520924 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தமிழக அரசின் உயர்கல்வித்துறையின் கீழ் இயங்கி வரும் தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம் அறிவித்துள்ளது.
Hindusthan Samachar / vidya.b