பாஜவையும், பிரதமரையும் புகழ்ந்து பேசும் எம்பி சசி தரூர் ஏன் காங்கிரஸில் இருக்க வேண்டும்? - காங்கிரஸ் மூத்த தலைவர் சந்தீப் தீக்ஷித் கேள்வி
புதுடெல்லி,20 நவம்பர் (ஹி.ச.) காங்கிரஸ் மூத்த தலைவரும், கேரளாவின் திருவனந்தபுரம் எம்பியுமான சசி தரூர், 69, சமீப காலமாகவே பிரதமர் மோடியையும், பாஜவையும் புகழ்ந்து வருகிறார். இது, காங்., மேலிடத்தை எரிச்சலடைய செய்துள்ளது. இந்த சூழலில், டில்லியில் தனி
பாஜவையும், பிரதமரையும் புகழ்ந்து பேசும்  எம்பி சசி தரூர் ஏன் காங்கிரஸில் இருக்க வேண்டும் -  காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான சந்தீப் தீக்ஷித் கேள்வி


புதுடெல்லி,20 நவம்பர் (ஹி.ச.)

காங்கிரஸ் மூத்த தலைவரும், கேரளாவின் திருவனந்தபுரம் எம்பியுமான சசி தரூர், 69, சமீப காலமாகவே பிரதமர் மோடியையும், பாஜவையும் புகழ்ந்து வருகிறார். இது, காங்., மேலிடத்தை எரிச்சலடைய செய்துள்ளது.

இந்த சூழலில், டில்லியில் தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரதமர் மோடி பேசியதை காங்கிரஸ் எம்பி சசி தரூர் புகழ்ந்து பேசினார்.

இந்தியாவின் ஆக்கப்பூர்வமான வளர்ச்சி மற்றும் காலனித்துவத்துக்கு பிந்தைய மனநிலையை வலுவாக வளர்ப்பது பற்றி அருமையாக எடுத்துரைத்ததாக அவர் கூறினார்.

இது காங்கிரஸ் கட்சியினரிடையே அதிருப்தியையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், டில்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீக்ஷித்தின் மகனும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான சந்தீப் தீக்ஷித், காங்., எம்பி சசி தரூருக்கு காட்டமாக சில கேள்விகளை எழுப்பியுள்ளார்.

அவர் கூறியதாவது;

சசி தரூரின் பிரச்னை என்னவென்றால், நாட்டைப் பற்றி அதிகம் தெரியாதது தான். காங்கிரஸ் கொள்கைகளுக்கு எதிராக சென்று கொண்டு, ஒருவர் நாட்டிற்கு நல்லது செய்கிறார் என்று உங்களுக்கு தோன்றினால், நீங்களும் அவரது கொள்கைகளைப் பின்பற்ற வேண்டும். நீங்கள் ஏன் காங்கிரஸில் இருக்கிறீர்கள்? நீங்கள் ஒரு எம்.பி. மட்டும்தான் என்பதால் தானா?.

இவ்வாறு கூறியுள்ளார்.

Hindusthan Samachar / JANAKI RAM