Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 21 நவம்பர் (ஹி.ச.)
இந்திய தலைநகர் டெல்லியில் காற்று மாசு அதிகரித்து வரும் நிலையில் குளிர் காலங்களில் டெல்லியில் காற்று மாசும், பனி மூட்டமும் சேர்ந்து மக்களுக்கு கடுமையான சுவாசக் கோளாறுகளை ஏற்படுத்துகிறது.
இதற்கு வாகனப் புகை மற்றும் அண்டை மாநிலங்களில் பயிர்க் கழிவுகள் எரிப்பதனால் ஏற்படும் புகை காரணம் எனக் கூறப்படுகிறது.
இம்மாதத்தில் சுவாச பிரச்சனைகள் காரணமாக தங்களிடம் சிகிச்சைக்கு வரும் பெரியவர்களைக் காட்டிலும் குழந்தைகளின் எண்ணிக்கை 30 முதல் 40% வரை அதிகரித்துள்ளதாக சிறார் நுரையீரல் மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில் டெல்லியில் காற்று மாசைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது.அதன்படி, டெல்லியில் பள்ளிகளில் வகுப்பறைக்கு வெளியிலான நிகழ்வுகளுக்கு அரசு தடை விதித்துள்ளது.
காற்று மாசு நாளுக்குநாள் கடுமையாகி வரும் நிலையில் நவம்பர், டிசம்பர் மாதங்களில் டெல்லி பள்ளிகள் மைதானத்தில் மாணாக்கரை விளையாட அனுமதிப்பதைத் தடுப்பதைப் பரிசீலிக்கும்படி உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்திருந்த நிலையில் டெல்லி அரசு இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
Hindusthan Samachar / vidya.b