Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 21 நவம்பர் (ஹி.ச.)
உங்க iPhone-ஐ பத்திரமா வச்சிருக்கீங்களா? இப்போ Apple நிறுவனம், இந்தியாவில் அவங்களுடைய AppleCare+ திட்டத்துல ஒரு பெரிய அப்டேட்டைக் கொண்டு வந்திருக்காங்க. இது iPhone யூஸர்களுக்கு ரொம்பவே முக்கியமான செய்தி.
AppleCare+ with Theft and Loss என்ற புதிய திட்டம் அறிமுகம் ஆகி இருக்கிறது. இதன் மூலம், உங்க iPhone திருடு போனாலோ அல்லது தொலைந்து போனாலோ, அதற்கு பாதுகாப்பு (Coverage) கிடைக்கும். ஆண்டுக்கு இரண்டு முறை திருட்டு அல்லது இழப்பு ஏற்பட்டால், ஒரு சர்வீஸ் கட்டணம் செலுத்தி, நீங்கள் புதிய போனைப் பெறலாம்.
இப்பொழுது வரை AppleCare+-ல வருடாந்திர (Annual) திட்டங்கள் மட்டும்தான் இருந்தது. ஆனால், இப்பொழுது Apple, Monthly Plan மற்றும் Annual Plan என ரெண்டு ஆப்ஷன்களையும் அறிமுகப்படுத்தியிருக்காங்க.
மாதாந்திரத் திட்டம்:
இதன் விலை ரூ.799/மாதம் முதல் தொடங்குகிறது.
வருடாந்திரத் திட்டம்:
இதை ஒரு வருஷத்துக்கு மொத்தமாக வாங்கலாம்.
இந்த மாதாந்திர பிளான் மூலம், iPhone பயனர்கள் தங்களுடைய வசதிக்கு ஏற்றார் போல், பிளானை எவ்வளவு நாள் வேண்டுமானாலும் தொடரலாம்.
AppleCare+ மூலம் கிடைக்கும் மற்ற சலுகைகள்:
வரம்பற்ற விபத்து சேத பாதுகாப்பு (Unlimited Accidental Damage Protection)
உங்க iPhone தற்செயலா சேதமடைந்தால், ஸ்கிரீன் அல்லது பின் கண்ணாடி உடைந்தால், அல்லது லிக்விட் டேமேஜ் ஏற்பட்டால், Unlimited Repairs (எத்தனை முறை வேண்டும் என்றாலும் பழுது பார்க்கலாம்) கிடைக்கும்.
ஒவ்வொரு முறை ஸ்கிரீன்/கண்ணாடி ரிப்பேருக்கு ரூ.2,500-ம், மற்ற விபத்து சேதங்களுக்கு ரூ.8,900-ம் சர்வீஸ் கட்டணமாக இருக்கும்.
பேட்டரி மாற்றுதல் (Battery Replacement)
உங்க iPhone-ன் பேட்டரி ஹெல்த் (Battery Health) 80 சதவீதத்துக்குக் கீழே குறைந்தால், இலவசமாக பேட்டரியை மாத்தித் தருவாங்க.
முன்னுரிமை ஆதரவு (Priority Support)
24/7 Priority Support மற்றும் அங்கீகரிக்கப்பட்ட Apple ஸ்டோர்ல Genuine Apple Parts-ஐ வச்சு ரிப்பேர் பண்ணி தருவாங்க.
இந்த AppleCare+ திட்டத்தை நீங்க புது iPhone வாங்கும்போதே வாங்கலாம். இல்லையென்றால், போன் வாங்கிய 60 நாட்களுக்குள் உங்க iPhone Settings ஆப் மூலமா இந்த பிளானை ஆக்டிவேட் பண்ணிக் கொள்ளலாம்.
மொத்தத்தில், AppleCare+ மூலம் Theft and Loss Protection போன்ற கூடுதல் பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் Monthly Plan போன்ற வசதிகள் வந்திருப்பது iPhone யூஸர்களுக்கு ரொம்பவே சந்தோஷமான செய்தி.
Hindusthan Samachar / JANAKI RAM