Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 21 நவம்பர் (ஹி.ச.)
கேலோ இந்தியா மற்றும் ஃபிட் இந்தியா இயக்கத்தின் தொடர்ச்சியாக மத்திய அரசு சார்பில் நாடு முழுவதும் Sansad Khel Mahotsav விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகிறது.
தமிழகத்தின் நீலகிரி பாராளுமன்றத் தொகுதியில் இந்த விளையாட்டுப் போட்டிகள் இன்று துவங்கியது.
இதன் ஒரு பகுதியாக மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள ராம் பேட்மிட்டன் அகாடமி உள்விளையாட்டரங்கில் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது.
இதில் மேட்டுப்பாளையம், காரமடை, கோவை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பேட்மிட்டன் வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.
19 வயதுக்குட்பட்ட ஆடவர் மகளிர் பிரிவில் நடைபெற்ற பேட்மிட்டன் தகுதிச்சுற்று போட்டிகளில் 50க்கும் மேற்பட்டோர் போட்டியிட்டனர்.
இந்நிகழ்வில் மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த விளையாட்டு ஆர்வலர்கள், பயிற்சியாளர்கள், பொதுமக்கள் மற்றும் பாஜக நிர்வாகிகள் என பலரும் பங்கேற்றனர்.
தகுதிப் போட்டிகளில் வெற்றி பெறும் விளையாட்டு வீரர்கள் மாநில மற்றும் தேசிய அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / V.srini Vasan