மாமதுரையின் வருங்கால வளர்ச்சிக்கு எதிராகப் போடப்படும் தடைக்கற்களைத் தகர்த்தெறிவோம் - முதலமைச்சர் முக ஸ்டாலின்
சென்னை, 21 நவம்பர் (ஹி.ச.) பாஜக அரசை கண்டித்து மதுரையில் திமுக கூட்டணி கட்சிகளின் சார்பில் ஆர்ப்பட்டமானது நடைபெற்றது. இந்நிலையில் இது குறித்து தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அந்த பதிவில் அவர் குறிப்பிட்டுள்ள
Mks


Tweet


சென்னை, 21 நவம்பர் (ஹி.ச.)

பாஜக அரசை கண்டித்து மதுரையில் திமுக கூட்டணி கட்சிகளின் சார்பில் ஆர்ப்பட்டமானது நடைபெற்றது.

இந்நிலையில் இது குறித்து தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

அந்த பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது,

AIIMS-உம் வராது, MetroRail-ஐயும் வரவிட மாட்டோம் என மதுரையை வஞ்சிக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு எதிராகக் கூடல்நகரில் கூடிய நம் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியினர்.

அனைத்து வழிகளிலும் போராட்டத்தை முன்னெடுத்து, தமிழர்களின் பண்பாட்டுத் தலைநகராகத் திகழும் மாமதுரையின் வருங்கால வளர்ச்சிக்கு எதிராகப் போடப்படும் தடைக்கற்களைத் தகர்த்தெறிவோம்

என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ