நிலக்கரி திருட்டு தொடர்பாக ஜார்க்கண்ட், மேற்கு வங்கத்தில் 40க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை
கொல்கத்தா, 21 நவம்பர் (ஹி.ச.) மேற்கு வங்கம் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களில் கொல்கத்தா, ராஞ்சி மண்டல அமலாக்கத் துறை அதிகாரிகள் நிலக்கரி திருட்டு மற்றும் சுரங்க முறைகேடுகளில் தொடர்புடைய ‘நிலக்கரி மாஃபியா’ கும்பல்களுக்கு எதிரான நடவடிக்கைகளின் க
நிலக்கரி திருட்டு தொடர்பாக ஜார்க்கண்ட், மேற்கு வங்கத்தில் 40க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை


கொல்கத்தா, 21 நவம்பர் (ஹி.ச.)

மேற்கு வங்கம் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களில் கொல்கத்தா, ராஞ்சி மண்டல அமலாக்கத் துறை அதிகாரிகள் நிலக்கரி திருட்டு மற்றும் சுரங்க முறைகேடுகளில் தொடர்புடைய ‘நிலக்கரி மாஃபியா’ கும்பல்களுக்கு எதிரான நடவடிக்கைகளின் கீழ் இன்று(நவ 21) காலை 6 மணி முதல் சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஜார்க்கண்டில் நிலக்கரி திருட்டு மற்றும் நிலக்கரி கடத்தல் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக அமலாக்கத் துறை சுமார் 18 இடங்களில் சோதனை நடைபெற்று வருகின்றது. ஜார்க்கண்டில் அனில் கோயல், சஞ்சய் உத்யோக், எல்.பி. சிங் மற்றும் அமர் மண்டல் ஆகியோர் தொடர்புடைய நிறுவனங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

மேற்கு வங்கத்தின் துர்காபூர், புருலியா, ஹவுரா மற்றும் கொல்கத்தா மாவட்டங்களில் சட்டவிரோத சுரங்கம், சட்டவிரோத நிலக்கரி போக்குவரத்து மற்றும் நிலக்கரி சேமிப்பு வழக்கில் சுமார் 24 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நடத்தி வருகிறது.

மேற்கு வங்கத்தில் நரேந்திர கார்கா, யுதிஷ்டார் கோஷ், கிருஷ்ணா முராரி கயல், சின்மயி மொண்டல், ராஜ்கிஷோர் யாதவ் மற்றும் பலர் தொடர்புடைய இடங்களில் இந்த சோதனைகள் நடைபெற்று வருகிறது.

Hindusthan Samachar / vidya.b