Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 21 நவம்பர் (ஹி.ச.)
கோவை மாவட்டம் சூலூர் தாலுகாவிற்கு உட்பட்ட 5 கிராமங்களில் கடந்த 50 ஆண்டுகளாக மும்முனை மின்சாரம் வழங்குவதில் பாரபட்சம் காட்டி வந்துள்ளனர்.
இது தொடர்பாக தமிழக முதல்வருக்கு அந்த பகுதி விவசாயிகள் மற்றும் விசைத்தறி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
எம். ராயர் பாளையம் , சென்னப்பசெட்டி புதூர், சுண்டமேடு ,பொன்னே கவுண்டன் புதூர், ஒட்டர்பாளையம், தொட்டியனுர் ஆகிய கிராமங்களுக்கு பெரும்பான்மையான நேரங்களில் இருமுனை மின்சாரம் மட்டுமே வழங்கப்பட்டு வந்தது.
இதனால் விவசாயம் மற்றும் விசைத்தறியாளர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியிருந்தனர்.
இது தொடர்பாக கோவை தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன் அவர்கள் தலைமையில், கழக கோவை மண்டல பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான செந்தில் பாலாஜி அவர்கள் மூலம் தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.
அதன் பேரில் உடனடியாக இந்த விஷயத்தில் தலையிட்ட முதல்வர் மற்றும் மண்டல பொறுப்பாளர் செந்தில் பாலாஜி ஆகியோர் 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்க உத்தரவிட்டனர்.
இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சூலூர் வந்திருந்த கழக கோவை மண்டல பொறுப்பாளர் செந்தில் பாலாஜி ,மற்றும் மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன், சூலூர் வடக்கு ஒன்றிய செயலாளர் சிபி. கே .செந்தில்குமார் ஆகியோருக்கு மாலை அணிவித்து நன்றி தெரிவித்தனர்.
அதைத் தொடர்ந்து கண்ணம்பாளையத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தேர்தல் பொறுப்பாளர்கள் நேர்காணல் நடைபெற்றது.
மாவட்டச் செயலாளர் தளபதி முருகேசன் ஏற்பாட்டில் மண்டல பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான செந்தில் பாலாஜி அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் வால்பாறை, பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, மற்றும் சூலூர் சட்டமன்றங்களைச் சேர்ந்த பாக முகவர்கள் மற்றும் பி எல் ஓக்கள் கலந்து கொண்டனர். ஒவ்வொரு நகர ஒன்றிய தொகுதி என தனித்தனியாக அழைக்கப்பட்டு மண்டல பொறுப்பாளர் செந்தில் பாலாஜி ஆலோசனை வழங்கி வாக்காளர் சீர்திருத்த பணி தொடர்பாக கேட்டறிந்தார்.
மேலும் தமிழக முதல்வரின் ஆணைக்கிணங்க 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் வெற்றி பெற அயராத பாடுபட வேண்டுமென கேட்டுக் கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் கோவை தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட மாவட்ட, ஒன்றிய, நகர, கிளைக் கழகச் செயலாளர் மற்றும் தேர்தல் பொறுப்பாளர்கள் பாக முகவர்கள் என 500க்கும் மேற்பட்ட கலந்து கொண்டனர் .
Hindusthan Samachar / V.srini Vasan