Enter your Email Address to subscribe to our newsletters

விருதுநகர் , 21 நவம்பர் (ஹி.ச.)
கூட்டுறவு நிறுவனங்களில் உள்ள 36 உதவியாளர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்காக விருதுநகர் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தால் 2025 ஆக. 6 அறிக்கை வெளியிடப்பட்டது.
இதற்கான நேர்முகத் தேர்வு நவ. 26ல் விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லுாரியில் நடைபெறவுள்ளது.
நேர்முகத்தேர்விற்கான அனுமதி சீட்டை மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தின் https://vnrdrb.net என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும் கூடுதல் விபரங்களுக்கு vnrdrb2025@gmail.com என்ற மின்னஞ்சல், 04562 290769 என்ற தொலைபேசியை தொடர்பு கொள்ளலாம் எனவும் விருதுநகர் மாவட்ட கூட்டுறவு சங்கம் அறிவித்துள்ளது.
Hindusthan Samachar / vidya.b