Enter your Email Address to subscribe to our newsletters

கரூர், 21 நவம்பர் (H.S.)
கரூர், வெண்ணைமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் இனாம் நில விவகாரத்தில் வீடுகளுக்கு சீல் வைக்க வந்த அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி, முன்னாள் அதிமுக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் திமுக, பாமக, நாம் தமிழர், விசிக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட அனைத்து கட்சி பிரமுகர்கள் உட்பட பல்வேறு நபர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதேபோல் அதிகாரிகள் சீல் வைக்க வந்த போது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தற்கொலைக்கு முயன்ற கண்ணம்மாள், சக்திவேல், பரமேஸ்வரி, மகேந்திரன் ஆகிய 4 பேர் மீதும் மனித உயிருக்கு ஆபத்து விளைவித்தல், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
மேலும், அறநிலையத்துறை நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து கரூர் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாய சங்கத்தை சேர்ந்த கருணாமூர்த்தி, கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட 30 பேர் மீதும் சட்டவிரோதமாக ஒன்று கூடுதல், அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Hindusthan Samachar / ANANDHAN