யூ டியூப், பேஸ்புக், எக்ஸ், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் இசையமைப்பாளர் இளையராஜாவின் புகைப்படத்தை பயன்படுத்த இடைக்கால தடை
சென்னை, 21 நவம்பர் (ஹி.ச) பல்வேறு யூ டியூப் சேனல்கள், சோனி உள்ளிட்ட இசை நிறுவனங்கள், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களுக்கு எதிராக இளையராஜா மனுத்தாக்கல் செய்தார். தன்னை அடையாளப்படுத்தும் வகையில் தனது புகைப்படம், பெயர், இசைஞானி என்ற பட்டப் பெயர்,
Ilayaraja


சென்னை, 21 நவம்பர் (ஹி.ச)

பல்வேறு யூ டியூப் சேனல்கள், சோனி உள்ளிட்ட இசை நிறுவனங்கள், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களுக்கு எதிராக இளையராஜா மனுத்தாக்கல் செய்தார்.

தன்னை அடையாளப்படுத்தும் வகையில் தனது புகைப்படம், பெயர், இசைஞானி என்ற பட்டப் பெயர், குரல் என எதையும் பயன்படுத்தக் கூடாது என மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டது

சமூக வலைதளங்களில் ஏற்கனவே பதிவிடப்பட்ட புகைப்படங்களை நீக்க வேண்டும். அனுமதியின்றி தனது புகைப்படத்தை பயன்படுத்தியதன் மூலம் கிடைத்த வருமான விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

யூ டியூப், பேஸ்புக், எக்ஸ், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் இசையமைப்பாளர் இளையராஜாவின் புகைப்படத்தை பயன்படுத்த இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மனுவுக்கு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணை நான்கு வாரங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / P YUVARAJ