சென்னை விமான நிலையத்தில் உடனடியாக செயல்பாட்டுக்கு வந்துள்ள புதிய விதிமுறை
சென்னை,21 நவம்பர் (ஹி.ச.) சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்துக்கு வரும் வாகனங்கள் பன்னாட்டு முனையம் மற்றும் உள்நாட்டு முனையங்களில் பயணிகளை இறக்கி விட்டோ அல்லது விமான நிலையத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டோ வெளியில் செல்லும்போது 10 நிமிடங்களுக்கு
சென்னை விமான நிலையத்தில் உடனடியாக செயல்பாட்டுக்கு வந்துள்ள புதிய விதிமுறை


சென்னை,21 நவம்பர் (ஹி.ச.)

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்துக்கு வரும் வாகனங்கள் பன்னாட்டு முனையம் மற்றும் உள்நாட்டு முனையங்களில் பயணிகளை இறக்கி விட்டோ அல்லது விமான நிலையத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டோ வெளியில் செல்லும்போது 10 நிமிடங்களுக்குள் சென்றுவிட்டால் பார்க்கிங் கட்டணம் கிடையாது.

ஆனால் 10 நிமிடங்களை கடந்து செல்லும் வாகனங்கள் 30 நிமிடங்களுக்கு ரூ.85 பார்க்கிங் கட்டணம் செலுத்த வேண்டும்.

ஆனால் மாற்றுத்திறனாளிகள், முதியோர், நோயாளிகள், கர்ப்பிணிகளை வாகனங்களில் ஏற்றவோ, இறக்கவோ நேரம் ஆகும் என்பதால் இது சாத்தியமாகாது.

இதையடுத்து பயணிகளின் கோரிக்கையை ஏற்று சென்னை விமான நிலையத்தில் மாற்றுத்திறனாளிகள், முதியோர், நோயாளிகள், கர்ப்பணிகள் உள்ளிட்ட பயணிகளை இறக்கி விடவோ, ஏற்றவோ வரும் வாகனங்களுக்கு கூடுதலாக 5 நிமிடங்கள் அதிகரித்து, கட்டணம் இல்லா நேரம் 10 நிமிடங்களில் இருந்து 15 நிமிடங்களாக அதிகரித்து இந்திய விமான நிலைய ஆணையம் அனுமதித்து உள்ளது.

மாற்றுத்திறனாளி, முதியோர், கர்ப்பிணியை ஏற்றி வரும் வாகனங்களுக்கு சிறப்பு பாஸ் அட்டை வழங்குவார்கள்.

15 நிமிடங்களுக்குள் வாகனங்கள் உள்ளே சென்றுவிட்டு வந்தால் கட்டணம் கிடையாது. அதை தாண்டி ஒரு வினாடி ஆகி இருந்தாலும் அடுத்த 30 நிமிடங்களுக்கான பார்க்கிங் கட்டணம் செலுத்த வேண்டும்.

இந்த புதிய விதிமுறை உடனடியாக செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

Hindusthan Samachar / JANAKI RAM