Enter your Email Address to subscribe to our newsletters

திருப்பதி, 21 நவம்பர் (ஹி.ச.)
ஜனாதிபதி நேற்று மாலை 4.30 மணிக்கு தனது மகள் இதி ஸ்ரீ முர்மு மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் ரேணிகுண்டா விமான நிலையத்திற்கு வந்தார்.
ஜனாதிபதி திரவுபதி முர்முக்கு அறநிலையத்துறை மந்திரி ராம நாராயண ரெட்டி, உள்துறை அமைச்சர் வாங்கலபுடி அனிதா, கலெக்டர் வெங்கடேஸ்வரர், எம்.எல்.ஏ. புலிவர்த்தி நானி உள்ளிட்டோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
பின்னர் சாலை மார்க்கமாக பத்மாவதி தாயார் கோவிலில் தரிசனம் செய்தார். பின்னர் திருப்பதி மலைக்கு வந்து பத்மாவதி தாயார் விருந்தினர் மாளிகையில் தங்கினார்.
இன்று காலை 9.30 மணி அளவில் வராஹ சாமியை தரிசனம் செய்தார்.
ஜனாதிபதி திரவுபதி முர்முக்கு தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர்.நாயுடு, தலைமை நிர்வாக அதிகாரி அணில் குமார் சிங்கால், கூடுதல் தலைமை நிர்வாக அதிகாரி வெங்கைய்ய சவுத்ரி வரவேற்பு அளித்து கோவிலுக்குள் அழைத்துச் சென்றனர்.
இதையடுத்து திரவுபதி முர்மு குடும்பத்தினருடன் ஏழுமலையானை தரிசனம் செய்கிறார்.
ஜனாதிபதி வருகையை முன்னிட்டு திருப்பதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
Hindusthan Samachar / JANAKI RAM