Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 21 நவம்பர் (ஹி.ச.)
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் திருமங்கலம் பிரதான கால்வாய் மூலம் பெறப்படும் நீரின் காரணமாக 2 ஆயிரத்திற்கும் அதிகமான ஏக்கரில் விவசாயிகள் நெல் சாகுபடி செய்துள்ளனர்.
குப்பணம்பட்டி, கட்டகருப்பன்பட்டி, நாட்டாபட்டி, சடச்சிபட்டி பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள நெற் பயிர்களில் சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் செவட்டை நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இலைகள் சிவப்பு நிறத்திற்கு மாறியும், வேர் பகுதி கருகியும் காணப்படும் சூழலில் இந்த நோய் அடுத்தடுத்து பரவ கூடுமோ என விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.
ஏக்கருக்கு 20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை செலவு செய்துள்ள சூழலில் இந்த நோய் பாதிப்பால் நஷ்டத்தை சந்திக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளதாகவும்.
மாவட்ட நிர்வாகம் மற்றும் வேளாண் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து இந்த நோய் பாதிப்பிலிருந்து பயிர்களை பாதுகாக்க வேண்டும் எனவும் மேலும் பரவாத வண்ணம் கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து வேளாண் அலுவலர்களிடம் கேட்ட போது,
நுண்ணூட்ட சத்து குறைபாடு காரணமாக இந்த நோய் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் எனவும், சாரு உறிஞ்சும் பூச்சிகளின் தாக்குதலும் காணப்படும் சூழலில் அனைத்து பகுதிகளையும் நேரில் ஆய்வு செய்து உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்தனர்.
Hindusthan Samachar / Durai.J