Enter your Email Address to subscribe to our newsletters


கோவை, 21 நவம்பர் (ஹி.ச.)
கோவையில் தீவிர வாக்காளர்கள் சீர்திருத்தம் குறித்த ஆலோசனை கிட்டம் அதிமுக இதய தெய்வம் மாளிகை அலுவலகத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி தலைமையில் நடைபெற்றது.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர்,
கோவை மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றது.
எஸ்ஐஆர் பணிகள் தோய்வாக நடைபெறுகிறது.
கோவையில் அதிக இடங்களில் திமுக அதிகாரிகளை மிஸ் யூஸ் செய்கிறார்கள் என்றும் சில இடங்களில் மொத்தமாக பார்ம்களை வாங்கி செல்கிறார்கள் என குற்றம் சாட்டினார்.
அதிமுக முகவர்கள் சிறப்பான முறையில் பணியாற்றி நியாயமான வாக்காளர்களை பதிவு செய்ய வேண்டும்.
தவறான வாக்காளர்கள் பதிவு செய்ய கூடாது.
இல்லாத வாக்காளர்களை பதிவு செய்ய முயற்சி நடக்கிறது.
அதிமுகவினர் கண்காணித்து வருகின்றனர்.
கோவை மாவட்டத்தில் பல திட்டங்களை செயல்படுத்தி மிகப்பெரிய வளர்ச்சியை ஜெ, எடப்பாடி தந்தார்கள்.
கோவைக்கு மெட்ரோ ரயில் திட்டத்தை எடப்பாடி அறிவித்தார்.
கோவை, மதுரை மெட்ரோ வேண்டும் என பிரதமர் மோடியிடம் எடப்பாடியார் கோரிக்கை வைத்தார்.
மெட்ரோ தொடர்பான விவரங்களை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்.
எடப்பாடி முதலமைச்சராக வந்த பிறகு, கண்டிப்பாக மெட்ரோ ரயில் வரும்.
அத்திக்கடவு - அவிநாசி 2 திட்டம் கொண்டு வரப்படும்.தொழில் துறை, மக்கள் கோரிக்கைகளை எடப்பாடியார் பிரதமர் மோடியிடம் வழங்கி செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்திதிருக்கிறார்.
திமுக விமான நிலைய விரிவாக்கம்திட்டத்தை ஆட்சியே முடியும் நிலையிலும் எதுவும் செய்யவில்லை எனவும் குற்றம் சாட்டினார் .
மேலும் 2026ல் முதலமைச்சராக எடப்பாடியார் வருவது உறுதி.
மத்திய அரசிடம் இருந்து திட்டங்களை வாங்கி தருவார் என குறிப்பிட்டார் மேலும்
மெட்ரோ ரயில் திட்டம் ஆய்வு செய்ய 3 கோடி நிதியை எடப்பாடியார் ஒதுக்கினார்.
எல்லா வழித்தடத்திலும் வர வேண்டும் என அதிமுக திட்டம் வகுத்த நிலையில் . திமுக இரண்டு வழிகளில் மட்டுமே கொண்டு வரும் வகையில் மாற்றியுள்ளார்கள்.
மேலும் மெட்ரோ ரயில் திட்டம் வேண்டும் என போராட்டம் நடத்தும் திமுக டெல்லியில் போராடலாமே , 40 எம்பிக்கள் கொண்டு நாடாளுமன்றத்தை முடக்க வேண்டியதுதானே என கேள்வி எழுப்பினார்.
Hindusthan Samachar / V.srini Vasan