Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 21 நவம்பர் (ஹி.ச.)
தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஆளும் திமுக, எதிர்க்கட்சியான அதிமுக, பாஜக, தேமுதிக, நடிகர் விஜய்யின் தவெக உள்ளிட்ட காட்சிகள் தேர்தல் பிரச்சாரங்களில் தீவிரம் காட்டி வருகின்றன.
தேர்தல் ஆணையமும் தேர்தல் பணிகளை தீவிரமாக மேற்கொண்டுவருகிறது. இந்நிலையில் சட்டப்பேரவை தேர்தலுக்கான பொருட்களை வாங்க டெண்டர் கோரப்பட்டுள்ளது. வாக்குப்பதிவின்போது பயன்படுத்தப்படும் பல்வேறு பொருட்களை கொள்முதல் செய்ய டெண்டர் கோரப்பட்டுள்ளது.
26.37 லட்சம் drawing pin, 1,05,480 ரப்பர் ஸ்டாம் பேடு, 1,05,480 ரப்பர் ஸ்டாம் பை குப்பிகள், வாக்குப்பதிவு இயந்திரங்களை மறைக்க 70 ஆயிரம் பிளாஸ்டிக் அட்டை பெட்டிகள், 1,05,480 பென்சில்கள், 3,16,440 நீல நிற பால் பாயிண்ட் பேனா, 1,05,480 சிவப்பு நிற பால் பாயிண்ட் பேனா, 1,05,205 சில்வர் வெள்ளை பால் பாயிண்ட் உள்ளிட்ட பொருட்கள் வாங்க தமிழக அரசு சார்பில் டெண்டர் கோரப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b