Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 21 நவம்பர் (ஹி.ச.)
இந்தியாவிலேயே 31 ஆயிரத்து 517 தொழிற்சாலைகளுடன் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளதாக இந்திய ஏற்றுமதி நிறுவனங்களில் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அதன் படி சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர் மாவட்டங்களில் வாகன உற்பத்தி ஆலைகளும், திருப்பூர், கோவை மாவட்டங்களில் ஜவுளி ஆலைகளும் அதிகளவில் உள்ளன. இதனால் முந்தைய ஆண்டின் இதே காலத்தில், ரூ.1.97 லட்சம் கோடி ரூபாயாக இருந்ததாகவும். காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஏற்றுமதி மட்டும், ஒரு லட்சம் கோடி ரூபாயுடன் முதலிடத்ததில் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் ஏற்றுமதி நடப்பு நீதியாண்டில் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான ஆறு மாதங்களில், 2.25 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. சென்னை மாவட்டம் 32 ஆயிரத்து 422 கோடி ரூபாயுடன் இரண்டாவது இடத்திலும். திருப்பூர் 21 ஆயிரத்து 328 கோடி ரூபாய் ஏற்றுமதியுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளது.
மோட்டார் வாகனம், ஆயத்த ஆடைகள், தோல் பொருட்கள், எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள், ஜவுளி உற்பத்தியில் தமிழகம் முன்னணியில் உள்ளது.அவற்றில் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள், தங்களின் தயாரிப்புகளை உள்நாட்டு சந்தையில் விற்பதுடன், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்வதாக இந்திய ஏற்றுமதி நிறுவனங்களில் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b