கோவையில் ஆசியா நகைகள் கண்காட்சி 2025 - இன்று துவங்கியது
கோவை, 21 நவம்பர் (ஹி.ச.) கோயம்புத்தூர், நவம்பர் 21, 2025 - கோவையின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நுண்கலை நகை கண்காட்சி மற்றும் விற்பனை ஆசியா நகைகள் கண்காட்சி 2025 கோவை நகரில் சிறப்பு பதிப்பு நடக்கிறது. இது கோவை அவிநாசி ரோட்டில் உள்ள தி ரெசிடென்சி
The Asia Jewels Exhibition 2025 began today in Coimbatore.


The Asia Jewels Exhibition 2025 began today in Coimbatore.


கோவை, 21 நவம்பர் (ஹி.ச.)

கோயம்புத்தூர், நவம்பர் 21, 2025 - கோவையின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நுண்கலை நகை கண்காட்சி மற்றும் விற்பனை ஆசியா நகைகள் கண்காட்சி 2025 கோவை நகரில் சிறப்பு பதிப்பு நடக்கிறது.

இது கோவை அவிநாசி ரோட்டில் உள்ள தி ரெசிடென்சி டவர் ஓட்டலில், நவம்பர் 21 முதல் 23 வரை நடக்கிறது.

அனைத்து வகையான 50-க்கும் மேற்பட்ட பிராண்ட், வடிவமைப்பு நகைகளை ஒரே கூரையின் கீழ் வாங்க சிறந்த இடமாக இது இருக்கும்.

தென்இந்தியாவின் மிகவும் கவர்ச்சிகரமான தனித்துவமிக்க நகை கண்காட்சியாக ஆசியா நகைகள் கணகாட்சி 2025, கோவையில் உள்ள தி ரெசிடென்ஸி ஓட்டலில் வரும் நவம்பர் 21 முதல் 23 வரை 55 பதிப்பாக நடக்கிறது. காலை 10.30 மணி முதல் இரவு 8.00 மணி வரை கண்காட்சியை பார்வையிடலாம்.

கோவையில் முதன்முறையாக எப்போதும் கண்டிராத சிறந்த வடிவமைப்பு நகைகள் தேர்வு செய்யப்பட்டு ஒரே இடத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

மிகவும் நுண்ணிய வேலைப்பாடுகள் கொண்ட உயர்தரமான பெயர்பெற்ற தங்கம் மற்றும் வைர நகைகள் இந்த கண்காட்சியில் தனித்துவமிக்க வகையில் இடம் பெறுவது குறிப்பிடத்தக்க அம்சம்.

நுண்கலை நகைகள், வைரம், பிளாட்டினம், பாரம்பரிய நகைகள், திருமணத்திற்கு ஏற்ற வடிவமைப்புகளுடன் இடம் பெறுகின்றன. அரிய வகை கற்கள், குந்தன், ஜடாவு மற்றும் போல்கி, வெள்ளி நகைகளும் இவற்றில் சில.

கோவை நகரில் நடக்கும் மிகவும் நுண்கலை திறன் கொண்ட ஒரு கண்காட்சி தான் ஆசியா நகைகள் கண்காட்சி. அடுத்து வரும் திருமணம், விழாக்காலத்துக்கு நகைகள் வாங்கவும், முன் பணம் செலுத்தி பதிவு செய்யவும் ஒரே இடத்தில் வாய்ப்பளிக்கும் கண்காட்சி. அரிய வகை வைர கற்கள் பதித்த உயர்தர நகைகளை வாங்கவும், உலக தரம் வாய்ந்த நகைகள் இடம் பெறும் தென்இந்திய அளவிலான கண்காட்சியாக திகழ்கிறது.

பெங்களுரு, மும்பை, டில்லி, ஜெய்ப்புர், ஐதராபாத், சென்னை மற்றும் கோவையில் முன்னணி அழகிய வேலைப்பாடுகளை கொண்ட நகைகள் இதில் இடம் பெறுகின்றன.

இந்திய அளவில் புகழ் வாய்ந்த உலகத்தரத்தில் வடிவமைப்பு கொண்ட நகைகள் இடம் பெறுகின்றன.

Hindusthan Samachar / V.srini Vasan