Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 21 நவம்பர் (ஹி.ச.)
உலகளாவிய தரகு நிறுவனமான HSBC, மெட்டல் மற்றும் சுரங்கத் துறைசார் பங்குகளுக்கான கவரேஜை பாசிட்டிவாகத் தொடங்கியுள்ளது. HSBC, ஒரு பங்கிற்கு மட்டும் 'வாங்கும்' மதிப்பீட்டையும் மற்றும் மற்றொரு பங்கிற்கு ரூ.980 விலை இலக்குடன் கவரேஜைத் தொடங்கியுள்ளன.
HSBC வாங்கப் பரிந்துரைக்கும் பங்குகள்:
ஹிண்டால்கோ - ஹிண்டால்கோவின் அமெரிக்க துணை நிறுவனமான நோவெலிஸில் ஏற்பட்ட பல பின்னடைவுகளின் தாக்கம் 2027 நிதியாண்டிலிருந்து குறையத் தொடங்கும் என்று தரகு நிறுவனம் நம்புகிறது. அதனால் ஹிண்டல்கோ பங்கிற்கு வாங்கும் மதிப்பீட்டுடன் ரூ.980 இலக்கு விலையை நிர்ணயித்துள்ளது.
ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ் ஒரு பங்கு விலை 1.09% உயர்வுடன் ரூ.799.60-க்கு வர்த்தகமாகி வருகிறது. ஹிண்டால்கோவின் சந்தை மதிப்பு ரூ.1.78 லட்சம் கோடிக்கும் அதிகமாகும். மூன்று மாதங்களில் இந்தப் பங்கு 13% உயர்ந்துள்ளது.
நேஷனல் அலுமினிய கம்பெனி லிமிடெட்:
தரகு நிறுவனம் நேஷனல் அலுமினியம் பங்கிற்கு 'வாங்கும்' மதிப்பீட்டுடன் கவரேஜைத் தொடங்கியுள்ளது. ஒரு பங்கின் விலை இலக்கு விலையாக ரூ.291 நிர்ணயித்துள்ளது.
இந்த நிறுவனத்தின் சந்தை மூலதனம் ரூ.47,500 கோடிக்கு மேல். மூன்று மாதங்களில் இந்தப் பங்கு 35% அதிகரித்துள்ளது. NALCO ஒரு பங்கு விலை 0.48% உயர்வுடன் ரூ.258.65-க்கு வர்த்தகமாகி வருகிறது.
டாடா ஸ்டீல்:
மூன்றாவதாக தரகு நிறுவனம் டாடா ஸ்டீல் பங்கிற்கு வாங்கும் மதிப்பீட்டைக் கொடுத்து, பங்கு ஒன்றிக்கு ரூ.215 விலை இலக்குடன் கவரேஜைத் தொடங்கியுள்ளது. டாடா ஸ்டீலின் ஐரோப்பிய வணிகத்தில் இழப்புகள் குறையத் தொடங்கும் என்று தரகு நிறுவனம் எதிர்பார்க்கிறது.
புதிய இலக்கு முந்தைய இறுதி விலையை விட 24% அதிகம். டாடா ஸ்டீலின் சந்தை மூலதனம் ரூ.2.16 லட்சம் கோடிக்கு மேல் உள்ளது. பங்கு ஒரு வருடத்தில் 24% உயர்ந்து. டாடா ஸ்டீல் பங்கு விலை 0.33% சரிவுடன் ரூ.172.40-க்கு வர்த்தகமாகி வருகிறது.
HSBC தரகு நிறுவனம் ஹோல்ட் செய்யப் பரிந்துரைக்கும் பங்குகள்!
1. ஹிந்துஸ்தான் ஜிங்க் - தரகு நிறுவனம் ஹிந்துஸ்தான் ஜிங்க் பங்கிற்கு ஹோல்ட் மதிப்பீட்டுடன், ரூ. 479 இலக்கு விலையை நிர்ணயித்துள்ளது. பங்கு நல்ல மதிப்புடையதாக இருப்பதாக தரகு நிறுவனம் கூறுகிறது.
2. கோல் இந்தியா - தரகு நிறுவனம் கோல் இந்தியாவின் மீதான கவரேஜை ஹோல்ட் பரிந்துரைப்புடன், பங்கிற்கான இலக்கு விலையை ரூ.374 ஆக நிர்ணயித்துள்ளது. பங்கு விலை கடந்த ஆறு மாதங்களில் பங்குகள் 28 சதவீதம் சரிந்துள்ளன.
Hindusthan Samachar / JANAKI RAM