Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 21 நவம்பர் (ஹி.ச.)
தமிழகம் முழுதும், கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்களுக்கு, திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படுகிறது.
கட்டுமானம், கம்பி வளைப்பு, மின் பணியாளர், பிளம்பர், வெல்டர், வர்ணம் பூசுதல், ஏசி, மெக்கானிக், கண்ணாடி அமைத்தல், சலவைக்கல் ஒட்டுதல் உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.
இதற்காக, 45.21 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு தொழிலாளிக்கும், தினசரி 800 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுகிறது.
இதுவரை, தமிழகம் முழுதும் 95 தொழிற்பயிற்சி நிலையங்களில், 11 தொழில் பிரிவுகளில், 21,344 கட்டுமானத் தொழிலாளர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.
தற்போது, 5,465 பேர் பயிற்சியில் பங்கேற்றுள்ளனர்.
பயிற்சி பெற விரும்பும் கட்டுமான தொழிலாளர்கள், அந்தந்த மாவட்டத்தில் உள்ள ஐ.டி.ஐ., மையங்களை அணுகலாம் என தொழிலாளர் நலத்துறை தெரிவித்துள்ளது.
Hindusthan Samachar / vidya.b