Enter your Email Address to subscribe to our newsletters

சேலம், 22 நவம்பர் (ஹி.ச.)
இந்தியத் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தமிழ்நாடு உட்பட 12 மாநிலங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் 2026 பணிகள் தமிழகம் முழுவதும் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.
01.01.2026-ஐத் தகுதி நாளாகக் கொண்டு நடத்தப்படும் இந்தப் பணியின் முதல் கட்டமான கணக்கெடுப்பு படிவங்கள் வழங்கும் பணி, கடந்த 04.11.2025 அன்று தொடங்கி, தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
பல்வேறு விமர்சனங்களுக்கு மத்தியில் இந்தப் பணிகள் நடைபெற்று வருவதால், ஆங்காங்கே விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய சிறப்பு முகாம்களும் நடத்தப்பட்டு வருகின்றன.வாக்காளர் பட்டியலில் பிழையின்றி அனைத்துத் தகுதியானவர்களின் பெயர்களும் சேர்க்கப்படுவதை உறுதி செய்வதே இந்தப் பணியின் முக்கிய நோக்கமாகும்.
இந்த நிலையில், சேலம் மாவட்டத்தில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், ஆவின் பால் பாக்கெட்டுகளில் விழிப்புணர்வு வாசகம் அதாவது, சேலம் மாவட்டம் வாக்காளர் பட்டியல் - சிறப்பு தீவிர திருத்தம் 2026: தங்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு தீவிரத் திருத்தம் 2026 கணக்கீட்டு படிவத்தினை தங்கள் பகுதி வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் ஒப்படைத்துவிட்டீர்களா? என்று அதில் கூறப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b